Abstract:
மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனுக்கான அனைத்து வழிகாட்டல்களையும் தன் வேதங்கள்
மற்றும் வேதக் கட்டளைகள் மூலம் வழங்கியுள்ளான். அவற்றுள் மிக முக்கியமானதொரு பகுதியாக
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை நாம் காணலாம். மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அவன்
தன் திருமறையிலே அதனை விளக்கியிருப்பது முஸ்லிம்கள் அதனை ஏற்று நடப்பதற்காகவேயாகும்.
அல்லாஹ_த்தஆலா இன்னாருக்கு இன்ன பங்கு என்ற அடிப்படையில் பாகப்பங்கீட்டை
விளக்கியுள்ளதுடன் இது மீற முடியாத அல்லாஹ்வின் கட்டளைகள் என அவனே அவனது
திருமறையில் குறித்துக் காட்டியுள்ளான். இந்த அவனது கட்டளையை மீறுவதன் பாரதூரத்தை மிகப்
பயங்கரமான வசனங்களுக்கூடாக சுட்டிக் காட்டியுள்ளான். ஸ{றா அன்னிஸாவின் 11 மற்றும் 12ஆம்
வசனங்கள் இதனைத் தெளிவாக விளக்குகின்றன. ஆனபோதிலும் முஸ்லிம் சமூகமானது அது
தொடர்பாக அறியாதவர்களாகஇ அறிந்தும் அதனைப் புறக்கணிப்போராக இருப்பதைக் காணக்கூடியதாக
உள்ளது. களுத்துறை வாழ் முஸ்லிம்களிடத்தில் இது பற்றிய தெளிவையூட்டிஇ இஸ்லாமிய
வாரிசுரிமைச் சட்டத்தின் பிரகாரம் அவர்கள் தமது சொத்துப் பிரிப்பை மேற்கொண்டு ஈருலகிலும்
வெற்றிபெறுவது அவசியமாகும். இவ்வாய்வானது முதற்தர தரவுகளான நேர்காணல்இ அவதானம்
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுப் பிரதேசத்தில்
சொத்துப் பிரிப்பின்போது பொதுவாக ஆண்கள் அநீதிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதனையும் பெரும்பாலும்
பெண்பிள்ளைகள் மாத்திரமே சொத்து வழங்கப்பட்டிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையினை சீர்செய்வதற்காக இஸ்லாமிய வாரிசுரிமை சட்டம்இ அதன் அவசியம் மற்றும்
முக்கியத்துவம் என்பன எல்லா மட்டத்திலும் துறைசார் உலமாக்கள்இ சட்டத்தரணிகளின்
துணைகொண்டு விளக்குதல்இ இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் அடிப்படையிலான முன்மாதிரி
குடும்பங்கள் உருவாக்கப்படுதல் என்பன போன்ற இன்னும் பல விதந்துரைகள் இங்கு
முன்வைக்கப்பட்டுள்ளன.