dc.description.abstract |
“முஸ்லிம்களின்; திருமணத்தில் சீதனத்தின் செல்வாக்கு - ஓர் இஸ்லாமிய நோக்கு” (புல்மோட்டைப்
பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு) எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்
நோக்கமானது புல்மோட்டைப் பிரதேச முஸ்லிம்களின் திருமணத்தில் சீதனத்தின் போக்கு, சீதனம்
செல்வாக்குச் செலுத்துவதற்கான காரணங்கள், அது சமுகத்தில் ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள்
போன்றவற்றை இணங்கண்டு சீதனத்தின் போக்கு பற்றி இஸ்லாத்தின் அடிப்படையில் நோக்குவதுடன்
அதற்கான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் முன்மொழிவதாகும். அளவு சார், பண்பு சார் ஆய்வு
முறையில் அமைந்த இவ்வாய்வுக்காக முதலாம் நிலைத் தரவுகளாக நேர்காணல், கலந்துரையாடல்,
அவதானம் என்பவற்றினூடாக தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு
இரண்டாம் நிலைத்தரவுகளானது நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தள ஆக்கங்கள்
என்பவற்றின் மூலம் திரட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் புல்மோட்டைப் பிரதேச முஸ்லிம்களின்
திருமணத்தின் போது சீதனக் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துச் செல்கின்றமை
கண்டறியப்பட்டுள்ளது. சீதனக் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களுள்
முறையற்ற சொத்துப் பங்கீடு, இறையச்சமின்மை, வறுமை, அந்நிய கலாசார தாக்கம், கல்வி நிலை
விருத்தி, இஸ்லாத்தை நடைமுபை்படுத்துவதில் சிக்கல் போன்றன பிரதானமாக உள்ளது.
புல்மோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் 95 வீதமான திருமணங்களில் சீதனம் பெறப்படுகிறது.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை அவதானிக்கலாம். குடும்பங்களுக்கிடையில் பிளவு
ஏற்படல், மனைவி கணவனுக்கு கட்டுப்படாத நிலை, விவாகரத்து இடம்பெறல், பொருளாதாரப்
பிரச்சினைகள், வாரிசுரிமைச் சொத்துக்களை முறையாகப் பங்கிட முடியாமை, இஸ்லாமிய
வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்படல் போன்றன முக்கிய பிரச்சனைகளாக காணப்படுகின்றன. ஏனவே
புல்மோட்டைப் பிரதேசத்தில் சீதனக் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துச் செல்கின்றமை, அதற்கான
காரணிகள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு
கண்டறியப்பட்டுள்ளது. எனவே புல்மோட்டைப் பிரதேச முஸ்லிம்களிடம் சீதனக் கொடுக்கல்
வாங்கல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சீதனம் தொடர்பான இஸ்லாத்தின் கருத்து
நிலைகளை தெளிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் சீதனம் தொடர்பான ஆய்வுகளை
மேற்கொள்வோருக்கும் இவ்வாய்வு பயனுடையதாக அமையும். |
en_US |