Abstract:
இன்று உலகில் மனிதனது வாழ்விலும் அவனது நடத்தையிலும் குடும்பம் சமூகம் என பல
வகையிலும் விவாகரத்துக்களின் செல்வாக்கும்இ எதிர்மறை விளைவுகளும் அதிகமாகனதாகவே
காணப்படுகின்றது. அதே போன்று விவாகத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எந்த அளவு
முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்துள்ளதோ அதனை விட இரு மடங்கு விவாகரத்துக்கள் இன்று
சமூகத்தில் அரங்கேறுகின்றன. இஸ்லாம் அனுமதித்து வெறுத்த ஒரு விடயம் விவாகரத்து இன்று
அதிகரித்துச் செல்கினறன. ஒரு பக்கம் விவாகப்பதிவுகள் நடந்த வண்ணம் இருக்க அதில் இரு
மடங்கு வீதங்கள் விவாகப்பிரிவுகள் சமூகத்தில் அரங்கேருகின்றன.சில பெண்களும்
பிள்ளைகளும் அநாதரவாக்கப்பட்ட நிலமைகள் இன்று கண்கூடாகும்.இவ்வாய்வு களுத்துறை
மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை மையப்படுத்திய ஒரு ஆய்வாகும்.முஸ்லிம் சமூகத்தில்
அதிகம் விவாகரத்துக்கள் இடம் பெறுவதற்காண காரணங்களை கண்டறிந்து அதன் மூலம்
தனி மனிதன்; குடும்பம், சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களையும் கண்டறிய இவ்வாய்வு
எத்தணிக்கின்றது. இவ்வாய்வுக்காக முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.