Abstract:
இஸ்லாமிய தூதுத்துவத்தின் பால் மக்களை அழைக்கும் பணி மனிதனின் உருவாக்கத்தின்போதே
ஆரம்பமாயிற்று. தஃவாப் பணி சமுகத்தின் உயர்விற்கு வித்திடுவதனால் இப்பணியில் ஈடுபடுவது
சமூகத்திலுள்ள அனைத்து தனிமனித, சமூக, நிறுவனங்கள் மீதும் கடமையானதாகும். முதல் மனிதன்
ஆதம் (அலை) தொடக்கம் உலக முடிவுவரை நடக்கக்கூடிய ஒரு அமலாக இருந்தாலும் இன்று
மக்களை நல்லநெறிகளின்பால் அழைப்பது அருகிக்கொண்டுவருகிறது. ஆய்வுப்பிரதேசமான இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெண் ஆலிமாக்கள் தஃவா பணியில் காட்டும் ஈடுபாட்டின்
அளவைக் கண்டறிதலையும், இப்பணியை மேற்கொள்ளும் போது பெண் ஆலிமாக்கள் எதிர்நோக்கும்
சவால்களை இணங்காண்பதையும்இ பல்கலைக்கழகத்தில் தஃவா மூலம் சிறந்த மாற்றத்தை
ஏற்படுத்துதலையும் நோக்கங்களாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்புரீதியானதாகக் காணப்படும் இவ்வாய்வின் முடிவுகளுக்காக முதலாம் நிலைத் தரவுகளான
வினாக்கொத்து மற்றும் மறைமுக உரையாடல் என்பவற்றை மையமாகக் கொண்டு பெறப்பட்ட
தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக ஆiஉசழளழகவ நுஒஉநட மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஆலிமாக்கள் இலங்கையிலுள்ள பல்வேறு
பிரதேசங்களிலிருந்தும் வந்து கற்கின்றனர். இவர்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள பல தஃவா
அமைப்புக்களிலும் உறுப்புரிமை பெற்றவர்கள் என்பதும் நோக்கத்தக்கது. எவ்வாறிருந்தும்
பல்கலைக்கழகத்துக்கு வந்து வெவ்வேறான பல கற்கைகளையும் தொடர்வதாலும், குடும்பத்தின்
நெருக்கடியாலும் படிப்புச்சுமை, நேரமின்மை போன்ற காரணங்களினால் எல்லா ஆலிமாக்களும்
தஃவாப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், இவ்வாய்வுப் பிரதேசத்தில் தஃவாப் பணிக்கான பெண்
ஆலிமாக்களின் பங்களிப்பானது குறைவாகவே காணப்படுகிறது என்ற முடிவிற்கு வரலாம்.
மேலும், இப்பணிக்கான பங்களிப்பினை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வு
முன்வைக்கின்றது.