Abstract:
இன்றைய சூழலில் தான் மாத்திரமின்றி தன்னை சார்ந்தோருக்கும் பாரிய தாக்கத்தினை
ஏற்படுத்தக்கூடிய ஓர் எதிர்மறையான உணர்வே கோபமாகும். ஒரு நாட்டின் முதுகெலும்பாகவும்,
சமூக மாற்றத்தின் முன்னோடிகளாகவும் திகழுபவர்கள் இளைய தலைமுறையினரே!
முன்னோடிகளாகத் திகழ வேண்டிய இளம் சமூகத்தினர் முன் கோபக்காரர்களாக விளங்குகின்றனர்.
அவ்வகையில் கோபமானது உடல், உள, சமூக தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே எமது
பல்கலைக்;கழக மாணவ மாணவியர்களை மையப்படுத்தி நாம் இவ்வாய்வினை நகர்த்தியுள்ளோம்.
“கோபத்தினால் ஏற்படும் உடல் மற்றும் உளவியல் தாக்கங்கள்” எனும் தலைப்பிலான எமது
ஆய்வானது காலத்தின் தேவையைக்கருதி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாகும். அவ்வடிப்படையில்
இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை ஆய்வு மூலங்களாகக் கொண்டு
மேற்கொள்ளப்படுகின்றது.