Abstract:
இலங்கை ஒரு பல் கலாசார சமுதாய அமைப்பினைக் கொண்ட நாடு. இது சிங்களவர்களைப்
பெரும்பான்மையாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் போன்றவர்களை
சிறுபான்மையினராகவும் கொண்டமைந்துள்ளது. இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான
பெரும்பான்மையினரின் நெருக்கீடு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இன முரண்பாடு தோற்றுவித்த
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சில வருடங்களே கடந்த நிலையில் இலங்கை சிறுபான்மை
முஸ்லிம்களை குறிவைத்து பெரும்பான்மை இனத்தவர்களால் தொடக்கிவிடப்பட்டிருக்கும்
நெருக்கடிகள் ஏற்படுத்தியிருக்கும் அசாதாரண சூழ்நிலை கவனம் கொள்ளப்பட வேண்டியது. அதன்
ஒரு பகுதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் வசிக்கின்ற, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குள்
அடங்கும் மாணிக்கமடு பிரதேசத்தில் மாயக்கல்லி மலை மேல் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் புத்தர்
சிலை மற்றும் அதனைத்தொடர்ந்து முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்காக
மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள
முடியும் என்பதில் கவனம் செலுத்துவதாக இவ்வாய்வு அமைகின்றது. மேலும் இலங்கை முஸ்லிம்
சிறுபான்மைக்கு எதிரான நெருக்கடிகள், அதற்கான காரணங்கள், அதனைத் தீர்ப்பதற்கான
வழிமுறைகள் என்பன பற்றியும் ஆராய்கின்றது. இது விபரிப்புப் பகுப்பாய்வு முறையில் அமைந்த
பண்பு ரீதியான ஆய்வாகும். இதற்கான தகவல்கள் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள்,
இணையத்தளக் குறிப்புக்கள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.