Abstract:
இன்றைய காலகட்டங்களில் அதிகரித்து வரும் விஞ்ஞான வளர்ச்சி, நவீன தொழில்நுட்ப
சாதனங்களின் வருகை, அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பாவனை, நெருக்கீட்டான வாழ்க்கை
முறை, இடப்பெயர்வு, உள்நாட்டு யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், வறுமை, தோல்விகள் மற்றும்
இன மத முறுகல்கள் என்பவற்றால் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல்வேறு
நெறுக்கடிகளையும் உளப்பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். இந்நிலைமையினைக் கருத்திற்
கொண்டு இவர்களுக்கான இஸ்லாமிய உளவளத்துணை சேவையின் அவசியம் இன்று அதிகம்
உணரப்படுகின்றது. இவ்வாய்வானது உளச்சிகிச்சையில் காணப்படும் இஸ்லாமிய சமய
உணர்வுகளையும் மற்றும் முழுமையான ஆன்மீக இயல்புடைய விளைவுகளையும்
எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இவ்வாய்வானது உளப்பிரச்சினைகளுக்கான முகாமைத்
திட்டமிடல்களில் எவ்வாறு ஆன்மீக நம்பிக்கைகள் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும்
ஆராய்கின்றது. அத்துடன் இவ்வாய்வு அறிக்கையினை மீள்கட்டமைக்கும் சிகிச்சைசார் நுட்பங்களின்
மாதிரிகளின் மீது கவனம் செலுத்துவதுடன் உளச்சிகிச்சைக் கோளாறுகளை முகாமை செய்வதற்கான
பல்வேறுபட்ட உடல், உள சமூக மாதிரிகளான குடும்ப சிகிச்சை, தியான சிகிச்சை, இசை சிகிச்சை
மற்றும் நறுமண சிகிச்சை போன்றவற்றின் மீதான இஸ்லாமியத் தாக்கங்களையும்
கலந்துரையாடுகின்றது. இதில் மிக முக்கியமான விடயமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள்
எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய மயப்படுத்தப்பட்ட உளச்சிகிச்சைசார்
விடயங்கள் ஒழுக்கசார்பாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் பயனள்ளதாகவும் காணப்படுகின்றன
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.