Abstract:
ஷூறா என்பது இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கில் அதிமுக்கியத்துவம் பெறும் ஒன்று. மிகச் சிறிய
விடயங்களில் கூட ஷூறா என்ற பொறிமுறை விட்டகலாமல் இருக்க வேன்டும் என்று எதிர்பார்க்கும்
இஸ்லாம், மிக உயர்மட்டமான அரசிலும் அப்பொறிமுறை கண்டிப்பாக இருந்தேயாக வேன்டும் என்று
வலியுறுத்துகிறது. அரசு இதனை சரிவர உள்வாங்கிக்கொள்ளும் போதுதான் மிகச் சீரான முறையில்
ஆட்சியை வழிநடாத்திச் செல்லலாம் என்பது தெளிவு. இப்பொறிமுறைக்கென்று சில
நிபந்தனைகளையும், வரையறைகளையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. இப்பின்னணியில் ஷூறா
பற்றிய அறிமுகம், இஸ்லாமிய அரசில் அதன் அடிப்படைகள், முக்கியத்துவம், நடைமுறை
ஆகியவற்றை நபிகளாரின் வாழ்வு முறைமையின் பின்னணியில் இருந்து இக்கட்டுரை ஆய்வு
செய்கின்றது.