Abstract:
முஸ்லிம் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே நிறைவேற்றக் கூடிய முக்கிய
கேந்திர ஸ்தலங்கள் மஸ்ஜித்கள் என்ற அடிப்படையில் அவை வணக்கவழிபாடுகள் என்ற நிலையைத்
தாண்டி சமூகத்துக்கு எவ்வாறான பங்களிப்புக்களை ஆற்ற வேண்டும் என இன்று சகலதரப்பினராலும்
எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்த போதும் ஆய்வுப்பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற மஸ்ஜித்களின்
சமூகப் புனரமைப்புப்பணிகள் ஏன் போதியதாக இல்லை என்ற ஆய்வுப்பிரச்சினையை
அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கெகிராவைப் பிரதேசத்தில்
அமைந்துள்ள ஐந்து ஜும்ஆ மஸ்ஜித்கள் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வானது
குறிப்பிட்ட பிரதேசத்தில் மஸ்ஜித்களின் பணி முஸ்லிம்களின் சகல துறைளையும் மையப்படுத்தியதாக
போதிய அளவில் இடம்பெறுகின்றனவா என்பதனை குறித்த ஆய்வுப்பிரதேச மக்களின் திருப்தி நிலை
ஊடாக ஒப்பீட்டடிப்படையில் கண்டறிந்து விளக்குவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் பணி ஆய்வுப்பிரதேசத்தில் போதியதாக இ;ல்லாவிட்டால்
அதற்கான காரணங்களை கண்டறிவதனையும், எதிர்காலத்தில் மஸ்ஜித்கள் ஊடாக குறிப்பிட்ட
பிரதேசத்தில் புனரமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை ஆலோசனைகளாக
முன்வைப்பதனையும், இவ்வாய்வு துணை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில்
இவ்வாறானதோர் ஆய்வு இடம்பெறவில்லை என்ற அடிப்படையில் இவ்வாய்வு இடைவெளியை குறை
நிரப்புவதில் இவ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் தரவு
மூலாதாரங்களினைப் பயன்படுத்தி அளவுசார் மற்றும் பண்புசார் ஆய்வு முறைகளை அடிப்படையாகக்
கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதன்pலைத் தரவுகள் வினாக்கொத்து,நேர்காணல் மூலமும்,
இரண்டாம் நிலைத்தரவுகள் நூல்கள்,சஞ்சிகைகள், இணையத்தள,பத்திரிகை ஆக்கங்கள் மூலமும்
பெறப்பட்டுள்ளன. வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் ளுPளுளுஇநுஒஉநட ஆகிய
மென்பொருட்களின் துணையுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.இவ்வாய்வின்
மூலம் குறிப்பிட்ட ஆய்வுப்பிரதேசத்தில் பெரும்பாலான மஸ்ஜித்களின் புனரமைப்புப்பணி;யில் மக்கள்
போதிய திருப்தி கொள்ளவில்லை எனவும் அதற்கு நிர்வாக ஒழுங்கீனம், பிரதேச மக்களின்
ஆர்வமின்மை, ஐக்கியமின்மை, இயக்கம் சார்பிரச்சினைகள் என பல விடயங்கள் காரணங்களாக
அமைந்துள்ளன எனவும் கண்டறியப்பட்டது. ஆய்வுப்பிரதேசத்தில் மஸ்ஜித்களின் பணியை
மேம்படுத்துவதற்காக திட்டமிட்ட அடிப்படையில் மஸ்ஜித்களின் நிர்வாகப் பணிகளை
விரிவுபடுத்துவதற்கான நடைமுறைகளை அமுல்படுத்துதல்,மஸ்ஜித்களின் பல்துறைசார் சமூகப்பணி
குறித்த விழ்ப்புணர்வூட்டல் போன்றன ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.