Abstract:
ஒல்லாந்த ஆட்சியாளர் தமது மதப்பிரசார நடவடிக்கைகளையும் புரட்டஸ்தாந்து மதத்தின் குறிக்கோள்களையும்
இலங்கை மக்கள் மத்தியில் பெரிதும் வலுப்படுத்திக் கொள்வதற்கு உபயோகித்த பிரதான கருவி கல்வியாகும்.
இலங்கை நாட்டில் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வியமைப்பை உருவாக்குவதற்கு முயன்றவர்கள் என்ற
வகையில், இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் முக்கியமானதாவுள்ளது. கல்வியே சமயத்தின்
கைப்பாவையாகியதால் இவர்களால் கல்வியில் செலுத்தப்பட்ட கவனம் தம் மதத்தையும் ஆதிக்கத்தையும்
பரப்புவதற்கு மேறகொள்ளப்பட்ட முயற்சிகளாகவே அமைந்தன. இலங்கை மக்களின் வாழ்க்கை மற்றும்
அவர்களது சமூக நலன்கள் ஆகியவற்றில் ஒல்லாந்தர் மிகக்கூடிய அக்கறை கொண்டிருந்தமையால் ஒல்லாந்தர்
காலக்கல்வி முறையும் கல்வி முயற்சிகளும் அவற்றோடு இணைந்த நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கை
நலன்களும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்ததாகவிருந்தமை தவிர்க்க முடியாததாயிற்று என்பதனை
எடுத்தியம்புவதாகவே இவ்வாய்வு அமைகின்றது.