Abstract:
உளவியல் என்பது இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் என்ற இரண்டுக்கும்
பொதுவான ஒரு துறையாகக் காணப்படுகிறது. இத்தகைய உளவியலானது மனிதனது
உடல், உள நடத்தைகளைப்பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். இவ்
உளவியலை பொது உளவியல், பிரயோக உளவியல் என்ற இரு பெரும் பிரிவுகளாக
பிரிக்கலாம். பிரயோக உளவியல் வகைகளில் முக்கியமான ஒரு துறையாக கல்வி
உளவளத்துணை காணப்படுகிறது. கல்வி உளவளத்துணை சேவை பாடசாலையின் ஒரு
முக்கிய அம்சமாக அமைய வேண்டும் என்பதை இன்றைய கல்வியலாளர்கள்
உணர்ந்துள்ளனர். மனிதன் தனது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு
வகையான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றான். அவை எமது வாழ்க்கையின்
சாதாரண நிகழ்வாகும். அதிகமான சந்தர்ப்பங்களில் அவை பிரச்சினைக்குரியனவாக
மாறிவிடும். அவ்வாறான சவால்கள் நிறைந்த சந்தர்ப்பங்களில் சரியாக வாழ்க்கைப்
பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு சக்தியையும், தைரியத்தையும் வழங்குவதன்
ஊடாக தனி நபரை திருப்தி செய்யும் ஓர் முறையாக உளவியல் உளவளத்துணை
(Psychological Counselling) காணப்படுகிறது. கல்வி கற்றலின் போதும,; வௌ;வேறு
வயது மாணவர்களுக்கு கற்பித்தலின் போதும் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும்
சிக்கல்களையும் அணுகுவதற்கு உதவுகின்ற ஒரு முறையே கல்வி உளவளத்துணை
(Educational Counselling) ஆகும். அதாவது இது முன்பள்ளி உளவளத்துணை,
ஆரம்பக்கல்வி உளவளத்துணை, இரண்டாம் நிலைக்கல்வி உளவளத்துணை, மூன்றாம்
நிலைக்கல்வி உளவளத்துணை எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இவ் ஆய்வானது
கல்வி உளவளத்துணையை பிரயோகிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்களைப்பற்றி பேசுவதாக
உள்ளது. இவ் ஆய்வின் முறையியலாக விபரிப்பு முறை, ஒப்பீட்டு முறை, பகுப்பாய்வு
முறை, விமர்சன முறை போன்றவையும் காணப்படுகிறன. மேலும் இவ் ஆய்வானது
இரண்டாம் நிலைத்தரவுகளை மையப்படுத்தியதாக அமைந்ததோடு பண்பு ரீதியான
ஆய்வாக உள்ளது. இவ் ஆய்வானது சமூகத்தில் கல்வி உளவளத்துணை
அவசியமானது என்பதை வெளிக்கொண்டுவர முற்படுகிறது.