SEUIR Repository

க.பொ.த உயர்தர வகுப்புக்களில் தொழில்நுட்பவியல்துறை பாடங்களைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

Show simple item record

dc.contributor.author தர்சினி, சந்திரசேகரம்
dc.contributor.author ஆனந்தமயில், நித்திலவர்ணன்
dc.date.accessioned 2018-07-20T06:18:00Z
dc.date.available 2018-07-20T06:18:00Z
dc.date.issued 2017-12-07
dc.identifier.citation 7th International Symposium 2017 on “Multidisciplinary Research for Sustainable Development”. 7th - 8th December, 2017. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 264-274. en_US
dc.identifier.isbn 978-955-627-119-5
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3105
dc.description.abstract இலங்கையில் தற்கால வேலை உலகில் திறன்மிக்க மனித மூலதனத்தை உருவாக்கும் நோக்குடன் 2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வகுப்பிற்கு ஐந்தாவது பாடப்பிரிவாக, ‘தொழில்நுட்பவியல்’ பாடத்துறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்பாடத்துறையின் பாடங்கள், முற்றிலும் வேறுபாடான புதிய உள்ளடக்கங்களைக்கொண்ட, அதிகளவில் செயன்முறை சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இத்துறைப்பாடங்களை உரிய முறையில் கற்பிப்பதில் ஆசிரியர்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். இவ்விடர்பாடுகளைக் கண்டறிவதுடன், அவற்றை தவிர்ப்பதற்குப் பொருத்தமான தந்திரோபாயங்களையும் முன்வைப்பதை நோக்காக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அளவைநிலை ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கான மாதிரியானது, வலிகாமம் கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடப்பிரிவைக்கொண்டுள்ள 1AB பாடசாலைகளில் இருந்து படைகொண்ட எழுமாற்று மாதிரி எடுப்பு முறையில் ஆறு அதிபர்கள், 24 ஆசிரியர்கள், மற்றும் தொழில்நுட்பப்பிரிவில் கல்வி கற்கும் 2018 உயர்தரப்பிரிவைச் சேர்ந்த 100 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். வினாக்கொத்துக்கள், நேர்காணல் மற்றும் நேரடி அவதானம் என்பவற்றின் மூலம் முதல்நிலைத்தரவுகளும், ஆய்வறிக்ககைகள் மற்றும் புள்ளிவிபரங்களில் இருந்து இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகர்க்கப்பட்டன. தரவுகள் விபரணப்புள்ளி விபரவியலைப்பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டன. போதிய வளங்கள் இன்மை, ஆசிரியர்களுக்கான விடய அறிவு மற்றும் பயிற்சி இன்மை, இப்பாடத்துறையை தெரிவுசெய்யும் மாணவர்களின் அடிப்படை ஆற்றல் குறைவு, பாடசாலை நிர்வாக ஒத்துழைப்பின்மை, தொழில்நுட்பபீடங்கள் குறித்த பாடசாலைகளில் முழுமையாக அமைக்கப்படாமை, மற்றும் பாடசாலைச் சமூகத்தின் ஆதரவு குறைவு போன்றன இpடர்பாடுகளாகக் காணப்படுகின்றன. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இன்மை, ஆசிரியர்களின் பட்டக்கல்வியின் வேறுபாடான விடய உள்ளடக்கங்கள், ஏனையபாடசாலைகளும் இப்பிரிவை ஆரம்பிததுள்ளமை, ஆசிரியர் இடமாற்றங்கள், புதிய ஆசிரிய நியமனங்கள் போன்றன விடய அறிவு, உரிய பயிற்சி என்பவற்றின் தொடர்ச்சியான தேவைகளை உருவாக்கிவருகின்றன. க.பொ.த சாதாரண தர வகுப்புக்களில் அனைத்து மாணவர்களினதும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கச் செய்தல், தொழில்நுட்பப்பிரிவைத் தெரிவு செய்வதற்கான அடிப்படைத்தகைமை பற்றி மீள்பரிசீலனை செய்தல், தொழில்நுட்பத்துறைக்கான பாடத்திட்ட அமைப்பு, செய்முறைத்தேவை, உயர்கல்வி வாய்ப்பு, தொழில்வாய்ப்புப் பற்றிய விழிப்புணர்வை கல்வி நிர்வாகம் மற்றும் பாடசாலைச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகளிடத்தில் ஏற்படுத்துதல்என்பன தொழில்நுட்பவியல் பாடங்களைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைப் பெருமளவில் குறைத்துக்கொள்ளக்கூடிய உபாயங்களாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. en_US
dc.subject க.பொ.த உயர்தரம் en_US
dc.subject தொழில்நுட்பவியல்துறைப் பாடங்கள் en_US
dc.subject இடர்பாடுகள் en_US
dc.title க.பொ.த உயர்தர வகுப்புக்களில் தொழில்நுட்பவியல்துறை பாடங்களைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account