Abstract:
“ஊர்காவற்றுறை பிரதேசத்தின் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்”
தொடர்பான இவ் ஆய்வானது யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான
ஊர்காவற்றுறைப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு ஆராய்வதுடன் எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்படும்
கைத்தொழில் சாத்தியங்கள் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்கள் இங்கு வாழும் மக்களின் வறுமைக்
குறைப்பில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றது என்பதை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றது.
அவ்வகையிலே இவ் ஆய்வானது முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டு ஆய்வு
செய்யப்படுகின்றது. முதலாம் நிலைத் தரவுகளைப் பெறுவதற்காக இங்கு முறையான எழுமாற்று மாதிரி (System
Sampling) முறையினை பின்பற்றி ஆய்வுக் குடியிலிருந்து மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து மற்றும்
நேர்காணல் முறைகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரவுகளைச் சேகரிப்பதற்காக மீன்பிடி
மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கைத்தொழில்கள், தும்புக் கைத்தொழில்கள், இரசாயனம் உற்பத்திக்
கைத்தொழில்கள், பனை தென்னை வளம் சார் உற்பத்திகள், சீமேந்து சார்ந்த உற்பத்திகள், விவசாய உற்பத்திகள்
போன்ற தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகளானவை புள்ளி
விபரணவியல் ஆய்வு அணுகு முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வகையில் சிறிய மற்றும் நடுந்தரக்கைத்தொழில்கள் ஊர்காவற்றுறைப்பிரதேசத்தின்
வறுமைக்குறைப்பிலும் பிரதேச அபிவிருத்தியிலும் குறிப்பிடக்கூடிய இடத்தைப் பெற்று வருகின்றது. எனினும்
மக்களின் வாழ்க்கைத்தரத்தை துரிதமாக முன்னேற்றக்கூடிய தன்மையை கொண்டு காணப்படவில்லை எனலாம்.