Abstract:
ஒரு பாடசாலையினை விளைதிறன் உள்ள பாடசாலையாக அபிவிருத்தி செய்வதில் அதிபரின் பங்கு இன்றியமையாதது.
இவ்வாறான அபிவிருத்திக்கு சிறந்த தலைமைத்துவப்பண்பு அவசியமாகின்றது. சிறந்த தலைமைத்துவம் என்பது ஒரு
நோக்கை அடைய “ஒரு சொல் அல்லது செயலினால் மற்றவர்களை அந்நோக்கை அடையச்செய்ய எடுக்கும் ஆற்றல்”
என்பதாகும். இந்த ஆற்றல் ஒரு பாடசாலை அதிபருக்கு முழுமையாக இருக்குமெனில் அப்பாடசாலையை அபிவிருத்தி
செய்வதில் எவ்வித தடைகளும் ஏற்படமாட்டாது. இருந்தும் பிரதேசரீதியாக நோக்கும் போது பாடசாலைகளின்
அபிவிருத்தியினை அதிபர்களின் தலைமைத்துவம்சார் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வது பொருத்தமானதாக
தோன்றுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பௌதீகவள, மனிதவள தேவைகளைப் போதியளவிற்கு
பெறமுடியாமல் இருப்பதும் இப்பாடசாலைகளின் வெளியீடுகளில் சிறந்த நிலையை எட்டுவதில் அதிபர்களின் பங்கு
இன்றியமையாததாகக் காணப்படுவதும் இவ்வாய்வுக் களமாக அமைகி;ன்றது. எனவேதான் அதிபர்கள் எதிர்நோக்கும்
தலைமைத்துவம் சார் பிரச்சினைகளை இனங்காண்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.