Abstract:
தஃவா எனும் எண்ணக்கரு இஸ்லாத்தில் முக்கியமானதாகும். முஸ்லிம் தனது நிலை, நிலமைகளுக்கு ஏற்ப தஃவாவை முன்னெடுக்க வேண்டியவனாவான். இந்த வகையில் தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவியர்களின் தஃவாப் பணியின் ஈடுபாடு அதனை மேற்கொள்ள அவர்கள் கையாளும் வழிமுறைகளை கண்டறிவதையும் அப்பணியில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்காண்பதனையும் இவ்வாய்வு பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளது. அளவு ரீதியிலான இவ்வாய்வு தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாம் வருட விடுதி மாணவியர்கள் மத்தியில் எழுமாறக தெரிவு செய்யப்பட்ட 79 பேரிடம் வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகளில் பகுப்பாய்வு அடிப்படையிலானது. மாணவியர்கள் பொதுவாக தஃவாவில் சாதாரணமான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கொண்டுள்ளனர். பாரம்பரிய ரீதியிலான தஃவா அணுகுமுறைகளிலேயே பெரிதும் தங்கியுள்ள அவர்கள் குழு, கூட்டுச் செயற்பாடுகளை விட தனிப்பட்ட ரீதியிலேயே தஃவாப் பணியில் ஈடுபடுகின்றனர். உயர் கல்விச் சூழல் அமைவு ஒன்றில் பட்டதாரி மாணவர்கள் என்ற வகையில் அறிவார்ந்த, ஆர்க்கபூர்வமான, திறன்கள் சார்பான தஃவா முறைகளை அவர்கள் பின்பற்றுவது ஓப்பீட்டு ரீதியில் குறைவானது என்பன இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். உயர்;கலா நிலயமொன்றில் தஃவாக்கான திட்டமிடலை மேற்கொள்வோருக்கு இவ்வாய்வு அடிப்படை கருத்தாக்கங்களை வழங்கவல்லது.