Abstract:
தொழில்நுட்பம் மற்றும் சிந்தனையியலின் சமீபத்திய முன்னேற்றங்கள் கல்வியியல்
ஆராய்ச்சிகளுக்கு முற்றிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்டன. இந்த விவாதத்தின்
மைய விடயங்களாக ‘மென்மையான சுற்றுச்சூழல்” மற்றும் மாணவர்களின் ‘உள
ஆரோக்கியம்’ என்பன அமைந்துள்ளது. மாணவர்களின் உள ஆரொக்கியம் சார்ந்த
பிரச்சினை சமூகத்தில் மையமாக மாறியுள்ளது. மனித ஆளமையும் அதன் வளர்ச்சியும்
சமூக சூழலின் விளைவாகும். புhடசாலையின் மென்மையான சுற்றுச் சூழலின்
பண்புகளிலிருந்து தொடங்கவும், மாணவர்களின் உள ஆரொக்கியத்தில் அதன் ஆழமான
தாக்கத்தை விளக்கவும் இக்கட்டுரை முயற்சிக்கிறது. எனவே, கல்வியாளர்களால்
பாடசாலையின் மென்மையான சுற்றுச் சூழல் கட்டுமானத்தைப் பற்றி மேலும் விரிவான
கவனத்தையும் ஆய்வையும் ஏற்படுத்தும் பொருட்டு இக்கட்டுரை
முன்மொழியப்பட்டுள்ளது.