Abstract:
நூலகப் பயன்பாடு என்பது ஒரு மாணவனின் கல்வி நிலையை உயர்ச்சி
அடையச் செய்வதில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணி எனலாம். அந்த வகையில்
பல்கலைக்கழக இளநிலைப்பட்டதாரிகளின் கல்வி நிலையையும், ஆய்வுத்திறனையும்
மேம்படுத்தக் கூடிய ஒரு சாதனமாக நாம் முன்வைக்க கூடிய ஒரு விடயமாக நூல்நிலையம்
காணப்படுகின்றது. இவ்வாய்வானது நூலக வசதிகளைப் பயன்படுத்துவதில்
இளநிலைப்பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதனை
நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அளவுசார் மற்றும் பண்புசார் முறையில்
அமைந்த இவ்வாய்வில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து தோதுமாதிரி
அடிப்படையில் (conveniance sampling method) தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்கள்
நடப்பாண்டில் (2021) முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் வருடத்தில் கல்வியைத்
தொடரும் மாணவர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட
மாணவர்களிடம் கட்டமைக்கப்படாத நேர்கணல் மற்றும் தொலைபேசிக் கலந்துரையாடல்
மேற்கொள்ளப்பட்டது. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் குறியீட்டு அடையாளப்படுத்தல்
மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளாக
ஊழஎனைந 19 பகுதியில் பிரதேச நூல்நிலையங்களை பயன்படுத்துவத்துவதிலும்,
இணையம் மூலம் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறான
பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.