Abstract:
குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் மீது கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தினை
வந்தாறுமூலை கிராமத்தில் ஆராய்கின்றதான இவ்வாய்விலே இரண்டாம் நிலை மற்றும்
முதல்நிலைத் தரவுகளானது பயன்படுத்தப்பட்டுள்ளது. வருமானம், சுகாதாரம், சேமிப்பு,
முதலீடு, நுகர்வுச் செலவு, தொழில் மற்றும் சமூகத்தாக்கம் ஆகியவை ரீதியாக குறைந்த
வருமானம் பெறும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம்
ஆராயப்பட்டுள்ளது. மாதிரித் தெரிவுகளானது எளிய எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம்
தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, பகுப்பாய்வுகள் அடிப்படை விபரணப் புள்ளிவிபரப்
பகுப்பாய்வுகள் மூலமும், Likert Scale மூலமும், Excel மற்றும் Stata SE 14 ஆகிய
மென்பொருட்களின் உதவியோடும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. Likert Scale முடிவுகளை
அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது கொவிட்-19 ஆனது குறைந்த வருமானம்
பெறும் வகுப்பினரது வருமானம், சேமிப்பு, முதலீடு, தொழில், சமூகத் தாக்கம் ஆகியவற்றில்
உயர்ந்த மட்டத் தாக்கத்தினையும், சுகாதாரம், நுகர்வுச் செலவு ஆகியவற்றில் நடுத்தர மட்டத்
தாக்கத்தினையும் கொண்டு காணப்படுகின்றது என முடிவு பெறப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் ஆய்வுப்
பிரதேசத்தை விரிவாக்கி மாதிரிப் பருமனை அதிகரித்து, வேறுபட்ட முறையியல்களைப்
பயன்படுத்த வேண்டும் எனவும் முன்மொழியப்படுகின்றன.