Abstract:
ஆலயப் பிரவேச மறுப்பென்பது ஈழகேசரிப் பத்திரிகை
வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அப்பத்திரிகை இலங்கையில்
தமிழர்கள் அதிகளவு வாழ்ந்த பகுதிகளில் அவர்களது வாழ்வியலின் பிரதான
அங்கங்கங்களிலொன்றாகக் காணப்பட்டிருந்தது. நுழைவு உரிமை
மறுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் சில
முற்போக்கு எண்ணங் கொண்டவர்களுடன் ஈழகேசரியும் இணைந்துகொண்டது.
இப்பத்திரிகை இந்நிகழ்வினை அக்காலப் பகுதியில் மனித உரிமை
மீறல்களின் ஒரு வடிவமாகவே பார்த்தது. எனவே அது எவ்வாறாயினும்
ஏனைய மக்களைப் போன்று இத்தகைய மக்கள் கூட்டத்தினையும்
சுதந்திரமாக ஆலயங்களுக்குள் சென்று வழிபாடு செய்வதன் பொருட்டு
ஈழகேசரி போராடியது. போராட்ட நடவடிக்கைகளில் ஈழகேசரி ஈடுபட்ட
சமயத்தில் அது பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்தது.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் என
அக்காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு தன்னாலான பணிகளை
இப்பத்திரிகை மேற்கொண்டு வந்தமை அவதானிக்கத்தக்கது.