dc.contributor.author |
Jeyasanthini, Thuraisingam |
|
dc.contributor.author |
Jeyapiratheeba, A |
|
dc.date.accessioned |
2015-09-23T07:56:08Z |
|
dc.date.available |
2015-09-23T07:56:08Z |
|
dc.date.issued |
2014-01-17 |
|
dc.identifier.citation |
Proceedings of the Second Annual Research Conference 2013 on "Emergence of Novelty in Business Management, pp 248- 254 |
|
dc.identifier.issn |
2279-1280 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/694 |
|
dc.description.abstract |
தரவுப்பகுப்பாய்வின் முடிவுகள் மரமுந்திரை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதிலும் அதனை சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதை எடுத்துக்காட்டுகின்றது. போதிய வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மரமுந்திரிகை உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்னளவாக 40,000 ஏக்கர்கள் மரமுந்திரிகை உற்பத்திக்கான நிலப்பகுதியாக காணப்படுகின்ற போதும் சுமார் 8500-9800 (Statistical data cashew corporation, Batticolo, 2012) வரையிலான ஏக்கர்களிலே இன்று மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மரமுந்திரிகை உற்பத்திக்கு அதிக பங்களிப்பு நல்கும் பிரதேசங்களில் ஒன்றாக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசம் காணப்படுகின்றது. குறைந்த உற்பத்திச் செலவுடன் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு துறையாக மரமுந்திரிகை காணப்படுகின்ற போதும் இத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக அதிக வருமானத்தைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் சிறிய மற்றும் பாரியளவில் மரமுந்திரிகை உற்பத்தி மேற்கொள்ளும் உற்பத்தியாளர்களிலிருந்து 50 பேர் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகவல்கள் புள்ளிவிபர நுட்பங்களூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவு பெறப்பட்டது. ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தில் மரமுந்திரிகை உற்பத்தி செய்பவர்களில் 92% மானோர் தமது சொந்த காணியிலும் 8 சதவீதமானோர் குத்தகை மற்றும் உறவினர் காணிகளிலும் தமது உற்பத்தியினை மேற்கொள்கின்றனர். 10,000 – 20,000 வரையிலான வருமானமே அதிகமானோரால் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர்களில் 52% மானோர் உற்பத்தியின் சந்தை விலை தொடர்பில் அறியாதவர்களாக காணப்படுகின்றனர். உற்பத்திகளை சந்தைப்படுத்தும் போது 92% மானோர் எவ்வித சுவை சேர்த்தலுமின்றியே விற்பனை செய்கின்றனர். உற்பத்தியாளர்களில் 75% மானோர் இடைத்தரகர்கள் மூலமும் 25% மானோர் நேரடியாகவும் சந்தைப்படுத்தப்படுகின்றனர் உற்பத்தி சந்தைப்படுத்தல் தொடர்பில் இப்பிரதேச உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் |
en_US |
dc.subject |
உற்பத்தி |
en_US |
dc.subject |
சந்தைப்படுத்தல் |
en_US |
dc.subject |
வருமானம் |
en_US |
dc.subject |
விலை |
en_US |
dc.subject |
மேம்படுத்தல் |
en_US |
dc.title |
மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் உற்பத்தி சந்தைப்படுத்தல் சார்ந்த பிரச்சினைகள் |
en_US |
dc.title.alternative |
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு |
en_US |
dc.type |
Full paper |
|