Abstract:
ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய தாக்கங்களிலொன்று அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துறையில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றங்களாகும். 1796 இல் இலங்கையின் கரையோரப்பகுதிகளைக் கைப்பற்றிப் பின்னர் 1815 இல் கண்டியினையும் கைப்பற்றி தங்களது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இலங்கையினைக் கொண்டு வந்த ஆங்கிலேயர் போர்த்துக்கேயர் மற்றும் டச்சுக்காரரைப் போன்று வர்த்தகத்தினையோ அல்லது மதம பரப்புதலையோ தங்களது பிரதான நோக்கங்களாகக் கொண்டு இலங்கையில் இயங்கவில்லை. அவர்களது பிரதான நோக்கமே நீண்டகாலத்திற்கு இலங்கையினைக் குடியேற்றமாக வைத்திருக்க வேண்டுமென்பதே.
வரலாற்றுக் காலங்களிலிருந்தே யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கை முழுவதும் விவசாயப் பொருளாதாரம் சார்ந்த நாடகவே இருந்து வந்துள்ளது. அதுமட்டுமன்றி அயற் பிரதேசங்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகத்தினையும் அது மேற்கொண்டிருந்தது.