dc.description.abstract |
இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாக விளங்கும் வடமாகாணம் 8884 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதோடு, ஏறத்தாள ஒரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது. 2011 இல் இதன் GDP பங்களிப்பு 3.7% ஆகும். இது ஏனைய மாகாணங்களை விட மிகக் குறைந்தளவான பங்களிப்பாகும். இந்த ஆய்வின் பிரதானமான நோக்கம் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை, அதன் உள்ளார்ந்த ஆற்றல்களை அறிவதோடு, பொருளாதார அபிவிருத்தியில் அது எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பதாகவும் இருக்கும்.
வடமாகாண பின்தங்கிய அபிவிருத்திக்கு மூன்று தசாப்த கால யுத்தம் பிரதான காரணமாகும். வடக்கின் விவசாய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பது, செய்கை பண்ணப்படும் நிலங்களுக்கு நவீனதொழிநுட்ப பிரயோகம் இன்மை, சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் இதற்கு காரணம். மேலும் ஏராளமான வடக்கின் கைத்தொழிற்சாலைகள் இன்னும் இயங்காமல் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்துள் முடங்கியுள்ளது. ஏராளமான வங்கிக்கிளைகள், காப்புறுதி நிறுவனங்கள் நிதிக்கம்பனிகள் தமது கிளைகளை விஸ்தரித்து சேவைகள் துறை வளர்சிசியடைந்தது போல் இருந்தாலும் 2011 இல் 137730 Mill Rs பெறுமதியை பதிவு செய்தாலும் இங்கு கடன்களும், குத்தகையுமே கூடுதலாக உள்ளது. மக்கள் தற்போது பெருமளவு நிதிநெருக்கடிக்குள் உள்ளனர். காரணம் யுத்தம் முடிவிற்கு வந்த பின் பெருமளவு சொத்துக் கொள்வனவு, ஆடம்பர வீடுகளை கடனடிப்படையில் கட்டி தற்போது கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். வர்த்தகர்கள், விவசாயிகள் எல்லோருமே கட்டடவாக்கத் துறையில் முதலிட்டு தற்போது சிரமப்படுகின்றனர். இந்த ஆய்வின் இரண்டு எடுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவது ”போருக்குப் பின் வடமாகாண அபிவிருத்தி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது.” இரண்டாவது ”அபிவிருத்தித் துறைகள் குறைந்த வேகத்தில் முன்னெடுக்கப்படகின்றன.” மேலும் இவ் ஆய்வு இரண்டாம்நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விபரணப்புள்ளிவிபரவியலைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே வடக்கின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்த அரசு உடனடியாக குறைந்த வட்டி வீதத்தை இவர்களுக்கு அறவிடுவதோடு, திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கூட்டி அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை கூட்ட வேண்டும் சவால்களை வெற்றிகொள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை விடுவித்தும், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தும் உற்பத்தித்துறைகளை வளர்க்க வேண்டும். வடக்கை பொருளாதார விருத்தியிலும் ஏனைய பிராந்தியங்களோடு இணைக்க வேண்டும். |
en_US |