Abstract:
மரபு ரீதியான நிதி நிறுவனங்களில் தொழிற்படக்கூடிய இஸ்லாமிய நிதிப்பிரிவுகளின் சேவைத்தரமும் வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புக்களும்: அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அல்-ஸபா, அல்-பலாஹ், அந்நூர் போன்ற மரபுரீதியான வங்கிகளிலுள்ள இஸ்லாமிய நிதிப்பிரிவுகளின் சேவைத்தரமும் வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்பின் பூர்த்திநிலையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நிதிப் பிரிவுகளினால் வழங்கப்படுகின்ற சேவைகள் வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புக்களுக்கு பொருந்துகின்றதா? அவற்றின் சேவைத்தரம் தொடர்பில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சரியான பூர்த்தி நிலை காணப்படுகின்றதா? மற்றும் வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புக்கள், எதிர்பார்ப்பின் பூர்த்தி நிலை என்பவற்றுக்கிடையில் என்பவற்றுக்கிடையில் இடைவெளிகள் காணப்படுகின்றதா? என்பன தொடர்டபாகவே இவ்வாய்வு ஆராய்கின்றது. மேலும்இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தரவுகள் அடிப்படையாகக் கொண்டு தரவு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மரபு ரீதியான வங்கிகளின் இஸ்லாமிய வங்கிப் பிரிவுகளின் சேவைத்தரம் தொடர்பிலான வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புக்களுக்கும் அவர்களது பூர்த்தி நிலைக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளியானது மறைப் பெறுமாணத்தில் அல்லது எதிர்கணியப் பெறுமாணத்தில் காணப்படுகின்றமை இவ்வாய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மறைப்பெறுமாணத்தில் காணப்படுகின்றமையானது மரபுரீதியான நிதி நிறுவனங்களின் இஸ்லாமிய வங்கிப் பிரிவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைத்தரம் முழுமையான ஒரு அடைவினை அடையவில்லை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
மேலும் சேவைத் தரம் தொடர்பான வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்பின் பூர்த்தி நிலை அவர்களது எதிர்பார்ப்புக்களின் திருப்தி நிலையை விட குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை அவற்றுக்கிடையிலான மறைப்பெறுமாணம், சேவைத்தர மட்டம் என்பன திருப்தியற்ற நிலையில் காணப்படுகின்றன என்பதனை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகின்றது.