Abstract:
தற்காலத்தில் வளர்ச்சியடைந்துவரும் துறையாகக் காணப்படும் இஸ்லாமிய வங்கி முறை குறித்து, கல்வியறிவுபடைத்த சமுதாயமான ஆசிரியைகள் மத்தியிலுள்ள விழிப்புணர்வு மட்டத்தினை அடையாளப்படுத்தலையும். விழிப்புணர்வினை பெற்றுக்கொள்ளக்கூடிய வினைத்திறன்மிக்க வழிமுறையினை இனங்காண்தலையும் இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வானது பண்புரீதியான தரவுகளைக் கொண்டதாக அமையும் அதேவேளை, ஆய்வினை மேலும் வலுப்படுத்துவதற்காக தொகைரீதியான தரவுகளையும் பயன்படுத்தியுள்ளது. முதன்மைத் தரவுகள், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 200 ஆசிரியைகளுக்கு வினாக்கொத்தினை வழங்குவதன் மூலம் திரட்டப்பட்டுள்ளன. இதன் தொகைரீதியான Microsoft Office Excell, SPSS 16.0 மென்பொருட்களினை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வு மூலம், கல்முனை முஸ்லிம் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட ஆசிரியைகள் மத்தியில் இஸ்லாமிய வங்கி பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான பிரதான காரணங்களாக, இஸ்லாமிய வங்கி பற்றி இவ்வாசிரியைகளிடமுள்ள குறைவான அறிவு, இயல்பிலேயே இவர்களிடம் காணப்படும் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலும் அது தொடர்பான விடயங்களை செவிமடுப்பதிலுமுள்ள ஆர்வம் போதாமை மேலும், விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வினைத்திறன் மிக்க வழிமுறைகளாக. பாடசாலை மட்டத்தில் இடம்பெறும் கருத்தரங்குகள் மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வுகள் என்பன இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாய்வினை, இஸ்லாமிய வங்கிகள் எதிர்காலத்தில் தமது விழிப்புணர்வூட்டற் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டியாகக் கொள்ளமுடியும்.