Abstract:
2009ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின்னரான இலங்கையின் கொள்கை முன்னெடுப்பில் பொருளாதார அபிவிருத்தி முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இனப்பரச்சனைக்கான ஆயுதப் போராட்டம் இலங்கையின் அரசியல் பொருளாதார விருத்தியை பாதித்திருந்தது.இதனை மீள உருவாக்கம் செய்வதற்கான உபாயத்துடன் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புக்கள் பொருளாதர சுபீட்சத்திற்கான வேகத்தை முன்னிறுத்தியது. கடந்த கால அரசாங்கங்கள் பொருளாதர கொள்கை முன்னெடுப்பினை முதலாளித்துவ சார்பிலும் சோஷலிஷம் கலந்த சமூக முதலாளித்துவ சார்புக்குள்ளும் வகைப்படுத்தி இயங்கின . உலகமும் மேற்கு, கிழக்கு என்ற வரைபுக்குள் இயங்கும் விதியையும் கொண்டதாக அமைந்த்து புதிய உலக ஒழுங்கு உருவான பிற்பாடு நிகழ்ந்த உலகளாவிய பதிவுகள் உலகமயமான கொள்கையின் தீவிரத்தினை எட்டியது. இதனால் இடது வலது என்ற சித்தாந்த்த்தை கடந்து முழுஉலகத்திற்குமான திரட்சியில் அரசுகளின் போட்டித்தன்மைக்குள் உலக இயக்கம் மீளவும் வடிவமெடுத்துக் கொண்டது.
சீனாவின் பொருளாதார செழிப்பும் அதற்கான பாய்சலும் புதிய உலக சத்தியாக பிரமாணமெடுக்க உதவிவருகின்றது இலங்கை அரசாங்கம் மேற்குடான உறவுமுறையில் ஏற்பட்ட சரிவையும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு சீனாவுடனான அல்லது கிழக்குலகத்துடனான உறவை பலப்படுத்திவருகின்றன. இதில் சீன- இலங்கை நட்புறவு பொருளாதார சுபீட்சத்திற்கான நடவடிக்கையாக அமையும் என்ற ஆய்வுப் பொருள் முதன்மைப்படுத்தப்பட்டு பாசீலிக்கப்படுகிறது.
இவ்வாய்வின் பிரதான முறையிலக்குள் தத்துவார்த்த அணுகுமுறையினையும் அதனடிப்படையில் புள்ளிவிபரவியலையும் உள்ளடக்கி இரண்டாம் நிலைத்தரவுகளின் பதிவுகளை முதன்மைப்படுத்தி ஆராயமுயலுகின்றது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உறவின் முக்கியத்துவம் சமகால உலக ஒழுங்கில் அளவீடு செய்வதன் மூலம் இதன் மதீப்பிட்டை முழுமைப்படுத்தலும் அதே நேரம் பிற பிராந்தியங்களுடனான உறவில் காணப்படும் நெருக்கடியும் சவாலும் தந்திரோபாயமாக கையாள முயலும் போக்கும் பொருளாதார சுபீட்சமும் ஒரே இடத்தில் மையப்படுத்தமுடியுமா என்பதை தெளிவு படுத்துவதாக உள்ளது.