Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7781
Title: நுகர்வுக் கலாசாரமும் அது முஸ்லிம் குடும்பங்களின் பொருளாதாரச் சேமிப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கமும்: தித்தவல்காலை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
Other Titles: The impact of consumer culture influence on the economic collapse of the Muslim pillars: the study focused on the Muslim area of Thitthawelgale
Authors: Nairoos, M. H. M.
Mahila, M. M.
Islamic Studies
Keywords: நுகர்வுக்கலாச்சாரம்
பொருளாதார வீழ்ச்சி
தித்தவல்காலை
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: இஸ்லாம் செலவழித்தலை தூண்டும் மார்க்கம், செலவழித்தலை ஒரு நடுநிலைத்தன்மையுடன் கொண்டு செல்வதை கற்பித்துள்ளது. நுகர்வுக்கலாச்சாரமானது இஸ்லாமிய செலவழித்தல் கோட்பாட்டை பெரிதும் பாதித்துள்ளதோடு இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கைப் போக்கிலும் கணிசமான அளவு மாற்றத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தேவை என்பதை மீறி தேவைப்படக் கூடும் என்ற நிலைப்பாட்டில் நுகர்வின் போக்கு அமைந்துள்ளது. இதனால் முஸ்லிம்களின் தினசரி வாழ்க்கைப் போக்கானது இஸ்லாமிய இலக்கினை விட்டும் தூர செல்வதோடு பொருளாதாரப் பிரச்சினைக்கு வழிகோலுகின்றது. தித்தவல்காலை வாழ் முஸ்லம்களின் நுகர்வுக் கலாச்சாரமானது சேமிப்பு வீதத்தை குறைக்கும் செயற்பாட்டிற்கு இட்டுச் சென்றுள்ளது. இதனால் மேலதிகக் கடன் சுமை மூலம் உண்டாகும் நுகர்வானது தித்தவல்காலை முஸ்லிம் சமூக நடைமுறைசார் சமூக. பொருளாதார சிக்கல்களையும் வாழ்வியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தித்தவல்காலையின் நுகர்வுக் கலாச்சாரம் எத்தகையது என்பதை பரிசீலித்து அப்பிரதேசத்தினது பொருளாதார சேமிப்பினை ஆய்வு செய்கிறது. முதலாம் நிலைத் தரவுகளான வினாக்கொத்து மற்றும் நேர்காணலையும் இரண்டாம் நிலைத்தரவுகளான சஞ்சிகைகள், ஆண்டறிக்கைகள், பதிவேடுகள், ஆவணங்கள், அறிக்கைகள் போன்றன தரவு சேகரிப்புக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தித்தவல்காலை வாழ் முஸ்லிம்களின் நுகர்வு நடத்தையின் போக்கை கண்டறிவதற்காக வினாக்கொத்து வழங்களானது ஒரு நம்பகத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகின்றமையால் Random Sampling முறை மூலம் தரவு சேகரிப்பானது பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் ஆய்வின் பல்வகைத்தன்மையானது சரியான முறையில் பிரதிபலிக்கின்றது. மேலும் தன்னை அறியாமலே இந்நுகர்வு நடத்தையினுள் சிக்கிக் கொண்டு பல பொருளாதாரப் பிரச்சினைகளினால் கடன்காரர்களாக மாறி இருக்கின்றனர். இதனால் தமது ஆயுள் காலத்தை சந்தோசமானதாகவும் நிம்மதியானதாகவும் கொண்டு செல்ல முடியாதவர்களாக காணப்படுன்றனர். தமது சமூக அடுக்கு நிலையை தற்காத்துக் கொள்வதற்காகவே இவர்கள் பெரிதும் நுகர்வுக் கலாசசாரத்தில் கலந்து வாழ்பவர்களாக காணப்படுகின்றனர். முஸ்லிம் குடும்பங்களில் இஸ்லாமிய செலவழித்தல் முறை மற்றும் ஒழுங்கான திட்டமிடல் முறையாகப் பேணப்படாமையே பொருளாதார சுமையும் கடன் சுமையும் ஏற்பட காரணமாய் அமைந்துள்ளது என்பதும், அதன் மூலமாகவே நுகர்வுக்கலாச்சாரத்தினுள் தன்னை அறியாமலே சிக்குண்டு காணப்படுகின்றனர் என்பது மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாகும். இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் ஆலோசனைகளும் இவ்வாய்வில் வழங்கப்பட்டுள்ளது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7781
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Law and Legislation

Files in This Item:
File Description SizeFormat 
Islamic Law and Legislation 130-131.pdf425.26 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.