Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7787
Title: இஸ்லாம் கூறும் சிறுவர் கல்வி உரிமைகள் பற்றிய நடைமுறை நிந்தவூர் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு
Other Titles: Practices on Islamic child rights in education: a study based on Nintavur divisional secretariat
Authors: Nairoos, M. H. M.
Faheema, M. H. F.
Islamic Studies
Keywords: சிறுவர்
கல்வி உரிமை
ஒழுக்கக் கல்வி
நடைமுறை
நிந்தவூர் பிரதேசம்
சமவாயம்
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: சிறுவர்கள் எனப்படுபவர்கள் சர்வதேச ரீதியில் சிறப்புக் கண்ணோட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட ஒரு சமூக அங்கத்தினராவர். இஸ்லாம் சிறுவர்களிற்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளதுடன், கல்வி உரிமையானது பிரதானமான உரிமைகளுள் ஒன்றாக கொள்ளப்படுகின்றது. இஸ்லாத்தில் கல்வி ஒழுங்குகள் மற்றும் அதன் பண்புகள் ~ரீஆவின் பார்வையில் வரையறை செய்யப்பட்டுள்ளதோடு இஸ்லாத்தில் சிறுவர்களிற்கான கல்வி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேச ரீதியிலான சிறுவர் உரிமைகள் பிரகடனங்களும், இஸ்லாமிய சிறுவர் உரிமைகள் பிரகடனங்களும் மற்றும் தேசிய சிறுவர் உரிமைகளின் சட்ட ஏற்பாடுகளும் பங்களிப்பு செய்கின்றன. சர்வதேச ரீதியிலான சிறுவர் கல்வி உரிமைளிற்கும் இஸ்லாமிய ~ரீஆ வரையறை செய்த கல்வி உரிமைகளிற்குமிடையிலான வேறுபாட்டின் தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கோடு, அம்பாறை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் நிந்தவூர் பிரதேசத்தில் இஸ்லாமிய சிறுவர் கல்வி உரிமைகள் தொடர்பான நடைமுறையினை ஆய்வு செய்வதாக இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது. இஸ்லாமிய ஒழுக்கப்போதனைகளை ஆடை ஒழுக்கம் மற்றும் பேச்சொழுக்கம் ஆகியவற்றின் பின்னனியில் ஆராய்ந்து அவற்றின் நடைமுறையை மதிப்பீடு செய்வதுடன், இஸ்லாமிய ஒழுக்கக் கல்வியின் போதனைகளினதும், நடைமுறைகளினதும் குறைபாட்டினால் சிறுவர்களிற்கு மத்தியில் ஏற்பட்டுள்ள நெறிமுறை பிறழ்வுகளையும் ஆய்வின் பிரச்சினையாக கொள்ளப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான முதலாம் நிலைத்தரவுகளாக ஆய்வுப் பிரதேசத்தில் வசிக்கும் சிறுவர்களின் மொத்த தொகையில் 365 பேர் குடித்தொகை மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து வினியோகிப்பதன் பெறப்படுகின்றன. அத்தரவுகள் MsExcel 365 மென்பொருளினூடாக பகுப்பாய்விட்குட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுடன் தொடர்புடைய தரவுகளை பெற்றுக் கொள்ள முடியுமான நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணைய பக்கங்கள் மற்றும் நேர்நிலையில் பெறப்பட்ட அலுவலக அறிக்கைகளின் பதிவேடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளும் முதலாம் நிலை, அளவு சார் தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுக்கட்டுரைகள், ஆவணங்கள், நூல்கள் மற்றும் இணையத்தள தகவல்கள் போன்றன இரண்டாம் நிலைத்தரவுத்திரட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுவதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களானது தனது கோட்பாட்டுத்திட்டத்தை நிறுவியுள்ளது. இவ்வாய்வினூடாக குறித்த ஆய்வுப்பிரதேசத்தின் சிறுவர் கல்வி உரிமையின் நடைமுறையானது இஸ்லாமிய சிறுவர் கல்வி உரிமையுடன் இயைந்து செல்லும் பாங்கினை மதிப்பீடு செய்வதோடு, இஸ்லாமிய ஆடை மற்றும் பேச்சு தொடர்பான ஒழுக்கக்கல்வியின் நடைமுறைகளை அறிந்து கொள்வதாகவும், சிறுவர்களிற்கான இஸ்லாமிய கல்வி போதனையின் மூலம் ஆன்மீக ரீதியான மேம்பாட்டை பேணுவதற்குமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7787
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Law and Legislation

Files in This Item:
File Description SizeFormat 
Islamic Law and Legislation 139-140.pdf424.89 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.