
Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7788Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.advisor | Sarjoon, R. A. | - |
| dc.contributor.author | Rufaida, R. F. | - |
| dc.date.accessioned | 2026-02-27T06:46:47Z | - |
| dc.date.available | 2026-02-27T06:46:47Z | - |
| dc.date.issued | 2024 | - |
| dc.identifier.citation | Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) | en_US |
| dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7788 | - |
| dc.description.abstract | இன்றைய சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் மதச் சுதந்திரம் என்பது மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. அவ்வாறே சர்வதேச மனித உரிமைகளால் இஸ்லாத்தின் மீது முன்வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக இஸ்லாத்தில் மதச்சுதந்திரம் இல்லை எனும் கருத்து காணப்படுகின்றது. இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு தொடர்பில் பல ஆய்வுகள் இடம்பெற்றுள்ள போதிலும் மதமாற்றம் தொடர்பான முஸ்லிம்களின் கருத்துநிலையை அவை ஆராயவில்லை. இலங்கை, இன மத ரீதியாக வேறுபடக் கூடிய பல மக்கள் வாழும் நாடாகும். எமது நாடு கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க பல மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சமயத்திலிருந்து இன்னொரு சமயத்திற்கு மாறிய மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சமூக சலுகைகள் தொடர்பான சமூக நடைமுறை அடிப்படையில் முஸ்லிம்களிடையே மதமாற்றம் பற்றிய கருத்துகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது. இந்த பின்னணியில், தொடர்பில் குர்ஆன், சுன்னா ஆய்வாளரால் மற்றும் சமகால இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுடன், மதமாற்றம் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய முஸ்லிம்களின் கருத்துக்களை ஆராய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒப்பிட்டு இலங்கை வடமேல் மாகாணத்தில் பல்லின மக்கள் செறிந்து வாழும் குருநாகல் மாவட்டம் ஆய்வுப் பிரதேசமாகத் தெறிவு செய்யப்பட்டது. இவ்வாய்விற்கான முதல் நிலை தரவுகளாக ஆய்வு பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் மொத்த தொகையிலிருந்து Robert V. Krejcie மற்றும் Daryle W. Morgan (1970) மாதிரித் தெரிவின் அடிப்படையில் 384 பேர் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து வினியோகிக்கப்பட்டு அதனூடாக பெறப்பட்ட தரவுகள் SPSS மென்பொருளின் (பதிப்பு 26) ஊடாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வுடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுகள், ஆவணங்கள், நூல்கள், இணையத்தள தகவல்கள் போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் தனது கோட்பாட்டுத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்திற்குற்பட்ட முஸ்லிம்களில் அதிகமானோர் (78.9%) ஒரு மனிதன் தான் விரும்பும் நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகின்றது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதனை ஏற்கின்றனர். எனினும் இஸ்லாம் மதச்சுதந்திரத்தை வழங்கவில்லை எனக்கூறக் கூடிய தரப்பினரும் (16.1%) முஸ்லிம்களில் உள்ளமை இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிறரின் வற்புறுத்தல் காரணமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரை இஸ்லாம் குற்றவாளியாகக் கருதுவதில்லை என்பது பற்றி அதிகமானோர் (72.5%) அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களது கருத்து நிலை இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் முரண்பட்டு அமைகின்றது. இம் மாவட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் (62.8%) இஸ்லாத்தை விட்டு வௌயேறியவருக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர் இஸ்லாமிய சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காவிடினும் சரியே எனும் கருத்தைக் கொண்டுள்ளனர். இலங்கையின் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் இம் முரண்பாடான புரிதல்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காண்பதில் இந்த ஆய்வு கணிசமான பங்களிப்பை வழங்கும். மேலும், இவ் விடயம் தொடர்பில் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆய்வு ஒரு தொடக்க புள்ளியாக அமையும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka | en_US |
| dc.subject | இலங்கை | en_US |
| dc.subject | இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல் | en_US |
| dc.subject | இஸ்லாமிய சட்டம் | en_US |
| dc.subject | முஸ்லிம் கருத்துநிலை | en_US |
| dc.title | இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல் பற்றிய முஸ்லிம்களின் கருத்து நிலையும் அதன் இஸ்லாமிய கண்ணோட்டமும்: இலங்கை குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு | en_US |
| dc.title.alternative | The Muslims ‘perception on apostasy and its Islamic legal status: study based on Kurunegala district of Sri Lanka | en_US |
| dc.type | Dissertation | en_US |
| dc.contributor.department | Islamic Studies | en_US |
| dc.identifier.regnum | SEU/IS/16/IC/175 | en_US |
| Appears in Collections: | Bachelor of Arts Honours in Islamic Law and Legislation | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| Islamic Law and Legislation 141-142.pdf | 429.38 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.