Abstract:
இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களைப் போன்றே மிக நீண்டகால
வரலாற்றுப் பாரம்பரியம் ஒன்றைக்கொண்டுள்ள ஓரு சமூகமாகும். எனினும் ஏனைய சமூகங்களின்
வரலாறுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு அச்சமூகங்களின் வரலாறுகள் மூல ஆதாரங்களின்
அடிப்படையில் நின்று ஆய்வு செய்வது போல் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒரு தொகுப்பாக
எழுதப்படாதது அச் சமூகத்துக்குள்ள ஓரு குறைபாடாகும். இதனால் காலத்துக்குக் காலம் பல்வேறு
நெருக்குதல்களை இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை வரலாற்றில்
நாம் அவதானிக்கின்றோம். இது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்ய
முற்படும் மாணவர்களுக்கும் ஓரு சவாலான விடயமாகவே உள்ளது. ஆகவே இலங்கை
முஸ்லிம்களின் வரலாற்று எழுதியலில் காணப்படும் போதாமைகள், இடர்பாடுகள் என்ன என்பதை
இவ்வாய்வு விபரிப்பதோடு அவற்றிற்கான தீர்வுளைப் பெற முயற்சிக்கின்றது.