Abstract:
இறைவனின் பார்வையில் மிகவும் வெறுக்கத்தக்க விடயம் தலாக் என்பது நாம் அறிந்ததே.சிறப்பான
வாழ்க்கைக்காக திருமணம் பெரும் கலாசார நிகழ்வாக மேற்கொள்ளப்படுகின்ற போதும் அவை
இடை நடுவே விரிசல் ஏற்பட்டு பிணக்கு ஏற்பட்டு தலாக்கில் சென்று முடிவடைவதினை ஏற்றுக்கொள்ள
முடியாத விடயமாகும். தலாக் குறித்து ஆய்வு உலகில் பல வகையான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தனது ஆய்வுப் பிரதேசமான சம்மாந்துறையில் இவ் ஆய்வுகள்
பெரியளவில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ்வாய்வு இடைவெளியினை நிறைவேற்றுவதாயே
இவ்வாய்வு அமைகின்றது. தலாக்கிற்கான காரணங்களைக் கண்டறிந்து தலாக் ஏற்படும் விகிதத்தைக்
குறைப்பதற்கான முன்மொழிவுகளை வழங்குவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். பனிப்பந்து
மாதிரி எடுப்பு உபாயம் மூலம் 50 மாதிரிகளிடம் நேர்கானல்,வினாக்கொத்து என்பன மூலமும் 2
இலக்குக் குழுக்கலந்துரையாடல் மூலமும் முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும்
நுல்கள்,சஞ்சிகை,இனையத்தள கட்டுரைகள்,வெளியீடுகள் மூலமும் சேகரிக்கப்பட்டன. இவ்வாய்வின்
மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பிரதான விடயம் என்னவெனில் ஆய்வுப் பிரதேசத்தில் நாளுக்கு நாள்
பல்வேறு காரணங்களுக்காக தலாக் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றுத என்பதாகும்.இதற்கான
சட்டங்களை மீள் திருத்தல், திருமணத்திற்கு முன்பு உளவளத்துணை வழங்கல், சிறந்த குடும்ப
வாழ்வு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கல் பலதாரமணம் செய்தல் எனும் பரிந்துரைகளும் இறுதியில்
வைக்கப்பட்டன.