Abstract:
மனிதன் தன்;தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் அதற்கான செலவீனங்களை எதிர்வு
கொள்வதற்கும் நல்ல வருமானத்தைப் பெற கடுமையாக முயற்சிசெய்கிறான். அப்போதிய
வருமானமில்லாதபோது, அவன் கடன் பெறவேண்டிய நிலைக்குள்ளாகிறான். ஆய்வுப்பிரதேசமான
ஒலுவில் பிரதேசத்தில் காணப்படுகின்ற் நுண்;கடன் திட்டத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களையும்,
பிரச்சினைகளையும் அடையாளங் காணுதல். நுண்கடன் திட்டத்தின் செயற்பாட்டு வடிவத்தை
தெளிவுபடுத்தல். போன்ற நோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாய்வானது பண்புரீதியானதாகக் காணப்படும் அதேவேளை நுண்கடனைப் பெற்ற 5 பேரைக்
கொண்ட 55 குழுக்கள் மற்றும் 3 பேரைக்கொண்ட 2 குழக்களிலிலிருந்து சுமார் 281
கடன்பெற்றவர்களில் 68 கடனாளிகள் நேர்காணல் மூலம் ஆய்வுக்குற்படுத்தப்பட்டனர். இதன்போது
நேர்காணல் மற்றும் அவதானம் என்பவற்றை மையமாகக் கொண்டு பெறப்பட்ட முதலாம் நிலைத்
தரவுகள் Microsoft Excel மென்பொருளைப் பயன்படுத்தி விபரணப் பகுப்பாய்வு மூலம் பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுப்பிரதேசத்தில் வாழும்; அதிகமானோர் தங்களது வறுமை காரணமாகவே நுண்கடன்
வழங்குபவர்களை அறிந்து அவர்களை நாடிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தச் சூழல் காணப்படுகின்றது.
சிறுசிறு தேவைகளுக்காக குறிப்பாக சிறு சுயதொழில் முயற்சிகள், அன்றாட வீட்டுச் செலவுகள்
போன்ற காரணங்களுக்காகவே நுண்கடன்களைப் பெற்றுள்ளனர். அதனைக் பெற்று அதிக
வட்டிவீதம், போதியளவான வருமானமின்மையினால் அக்கடனை மீளச்செலுத்த முடியாமல் இம்மக்கள்
பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். தங்களது சொத்துக்களை விற்று குடும்ப உறவினர்களுடன்
பகைத்துக் கொண்டதுடன் மனஉழைச்சலுக்கும் ஆளாகியுமுள்ளனர். இதனால் இவ்வாய்வுப்
பிரதேசத்தில் நுண்கடனின் மூலமாக பல்வேறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்ற முடிவிற்கு
வரலாம்.