Abstract:
மனிதவை ஜீவனோபாயத் தேவைக்காக பொருளீட்டுவது பிரதானமான ஓர் அடிப்படையாகும். இவ்வாறு
சம்மாந்துறைப் பிரதேசத்தில் பெரும்பாலும் கைத்தொழில், பண்ணை வளர்ப்பு, விவசாயம், வியாபாரம்
என்பனவே காணப்படுகின்றன. பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பல ஆய்வுகள் ஆய்வுப்
பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை எவ்வாறு இஸ்லாமிய மயப்படுத்துவது என்பது குறித்த
அறிவு மக்களிடம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இவ் இடைவெளியினை இந்த ஆய்வு
பூரணப்படுத்துகின்றது.
நோக்க மாதிரியின் அடிப்படையில் 420 குடும்பங்களில் இருந்து 42 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு,
நேர்காணல், இலக்குக் குழுக் கலந்துரையாடல், அவதானிப்பு முறை மூலம் முதலாம்
நிலைத்தரவுகளும், புத்தகங்கள், இணையத்தள புத்தி ஜீவித்துவ கட்டுரைகள் மூலம் இரண்டாம்
நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் என்னவெனில்
ஆய்வுப் பிரதேச மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஹலால், ஹறாம் பேணுவதில் ஆர்வம்
கொண்டவர்களாக இருந்த போதிலும் அது குறித்த இஸ்லாமிய மயமாக்க அறிவு சமூக மட்டத்தில்
குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
இதனை நிவர்த்தி செய்வதன் மூலம் பூரணமாக இதை திருப்தி பெற்ற ஓர் சமூகக் கூட்டாக ஆய்வுப்
பிரதேச மக்கள் திகழ்வார்கள் எனலாம். மேலும் இறுதியில் மேற்குறித்த இஸ்லாமிய நடைமுறைகளை
இஸ்லாமியப்படுத்துவதற்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.