Abstract:
இஸ்லாத்தின் தூது வாசிப்பிலிருந்தே ஆரம்பமாகியது. முஸ்லிங்களின் முன்னேற்றத்திலும்
வளர்ச்சியிலும் அடித்தளமாக வாசிப்பு மற்றும் நூல்கள் திகழ்ந்தன என்பதற்கு வரலாற்றிலிருந்தே பல
சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. ஐரோப்பாவின் இருண்ட காலத்தை முஸ்லிங்களின் நூல்களும்
நூலகங்களுமே விளக்கேற்றியது என்றால் மிகையாகாது. ஆனால் இன்று முஸ்லிம் பாடசாலை
நூலகங்களின் பங்களிப்பு அருகி வருகின்றது.
ஆய்வுப்பிரதேசமான கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில
பாடசாலைகளில் உயர்தரம் கற்கும் மாணவர்களுள் நூலகங்களைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு
காட்டுவோரின் அளவை கண்டறிதலையும், நூலகங்களை பயன்படுத்தாது வெறுமனே
பாடப்புத்தகங்களோடு மாத்திரம் தம்மை சுருக்கிக்கொள்வதற்கான காரணங்களை
இனங்காண்பதையும் மேலும் பரீட்சை மையக்கல்வி மாற்றம் பெற்று முஸ்லிம் சமூகத்தில்
பெரும்பான்மையினர் கல்வியியலாளராக, முஸ்லிம் இளம்தலைமுறையினராக மாற வேண்டும்
என்பதை மையமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசத்தில் பரீட்சை
மையக்கல்வி முன்னுரிமைப்படுத்தப்படுவதும் நூலகங்களின் அவசியம் குறித்து இன்னும்
உணர்த்தப்படாமை மற்றும் உணரப்படாமை நூலகத்திற்கான அமைதியான, சிறந்த சூழல்
காணப்;படாமைஇ முறையாக பயிற்றுவிக்கப்படாத நூலகர்களின் கவனயீனம்,பொடுபோக்கு போன்ற
காரணங்களால் நூலகங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. குறித்த ஆய்வுப்பிரதேசத்தில்
முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்தில் பாடசாலை நூலகங்களின் பங்களிப்பு குறைவாக
உள்ளது என ஆய்வ்pன் முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பாடசாலை நூலகப்பயன்பாட்டை
அதிகரிப்பதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இவ்வாய்வில் முன்வைக்கப்படடுள்;ளன.பண்பு
ரீதியானதாவும், எண்ணிக்கை ரீதியானதாகவும் காணப்படும் இவ்வாய்வின் முடிவுகளுக்காக முதலாம்
நிலைத்தரவுகளான வினாக்கொத்து,நேர்காணல் மற்றும் அவதானங்கள் என்பவற்றின் மூலம்
பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக Microsoft Excel மென்பொருள்
பயன்படுத்தப்பட்டுள்ளது.