Abstract:
இன்றைய காலகட்டத்தில் அனைத்து மனிதர்களிடமும் காணப்படக்கூடிய ஓர்
எதிர்மறையான உணர்வாக மன அழுத்தம் காணப்படுகின்றது. ஆண், பெண் என்ற
இருபாலாரிடமும் காணப்பட்டாலும் அதிலும் அதிகமாக பெண்களிடமே காணப்படுகிறது.
குறிப்பாக கல்வி பயிலும் மாணவிகள் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அதிகமாக முகம்
கொடுப்பதுடன் பல்வேறு உடல் மற்றும் உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டு தமது இலக்கை
அடைவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதை பார்க்கிறோம் அதுமாத்திரமல்லாமல் மன
அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகாட்டல்களும் அதிகமான பெண்களுக்கு தெரியாத
காரணத்தினால் மென்மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டு வாழ்வில் பல விரும்பத்தகாத
முடிவுகளை எடுப்பதற்கு முயற்சிப்பது இன்றைய சூழலில் மிக கவலையான விடயமாகும்.
எனவே இவ்வாய்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும்
அரபு மொழி பீட மாணவிகள் எதிர் கொள்ளும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளை
மையப்படுத்தி ஆய்வு செய்கின்றது. 'மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள்' எனும் தலைப்பிலான
ஆய்வானது காலத்தின் தேவையைக் கருதி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாகும்.
அவ்வடிப்படையில் இவ்வாய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை ஆய்வு
மூலங்களாக கொண்டு மேற் கொள்ளப்படுகின்றது.