Abstract:
ஒரு மாணவனின் ஆரம்பக் கல்வியாக குர்ஆனியக் கல்வி அமைய வேண்டுமென்பது இஸ்லாமிய
கல்வியலாளர்களது உறுதியான நிலைப்பாடாகும். அல்குர்ஆனுக்கும் மாணவர்களுக்குமிடையில்
உயிரோட்டமானதொரு உறவை வளர்ப்பதில் அறபுக் கலாசாலைகளது பங்களிப்பு மகத்தானது.
மனிதன மேம்பாட்டுக்கு உதவும் அறிவை வழங்கி வந்த அறபுக் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள்
இடைவிலகிச் செல்வதானது ஓர் பிரச்சினையாக ஆய்வாளர்களினால் அவதானிக்கப்பட்டதே இந்த
ஆய்விற்கான பின்னனியாகும். இடைவிலகலைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிதல் இங்கு ஆய்வுப்
பிரச்சினையாக நோக்கப்பட்டு அக்காரணிகளைக் கண்டறிவதும், அதற்கான தீர்வுகளை
முன்வைப்பதுமே பிரதான நோக்கமாகக் கருதப்பட்டு இவ்வாய்விற்கு கிழக்கின் முதல் அறபுக் கல்லூரி,
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி ஆய்வுப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டு ஆய்வுத்
தரவுகள் சேகரிக்கப்பட்டன.
சமூகவியல் பண்புசார் ஆய்வான இதில் ஆய்வுப் பிரதேச மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட
நேர்காணல், வினாக்கொத்து, கலந்துரையாடல் போன்ற முதலாம் நிலைத் தரவுகளினூடாகக் குறித்த
அறபுக் கலாசாலை ஷரீஆ துறை மாணவர்கள் இடைவிலகியதற்கான காரணங்களை
அடையாளப்படுத்தியுள்ளதோடு, அக்காரணிகள் அவர் சார் மட்டங்களிலும் செல்வாக்குச் செலுத்தும்
பாங்கினையும் கண்டறிந்து ஒரு விவரணஆய்வாக (னுநளஉசipவiஎந) இது முன்வைக்கப்பட்டுள்ளது.
இடைவிலகலுக்கான காரணிகளில் மாணவர், குடும்பம், கல்லூரி, சமூகம் சார் காரணிகளாக
முன்வைக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் வகைப்படுத்தி கல்லூரி சார் காரணிகளான
பாடத்திட்டம், கற்றல், கற்பித்தல் முறைகள், ஆசிரியர் மாணவர் உறவு போன்ற காரணிகளை
விரிவாக ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் இடைவிலகலைக் குறைப்பதற்கான கல்லூரியின்
பாடத்திட்டம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு மாணவர்களது ஆளுமை விருத்திக்கும், தொழில்
வாழ்க்கைக்கும் தேவையான அம்சங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். போன்ற
முன்மொழிவுகளை இவ்வாய்வு பிரசவித்துள்ளது.