Abstract:
இன்றைய வர்த்தக உலகில் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் அளவிட முடியாததாகும். இன்னும்
தகவல் தொழில்நுட்ப விருத்தியும் ஆங்கிலக் கல்வி அத்தியாவசியமாக இருப்பதற்கு மற்றொரு
காரணியாக உள்ளது. இதனால் பாடசாலைக் கல்வியானது ஆங்கிலக் கல்வியை முக்கியப்படுத்தும்
நிலையமாக உள்ளது. இருப்பினும் இன்றைய அளவில் பாடசாலை மாணவர்களிடையே ஆங்கிலக்
கல்வியானது பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால் முஸ்லிம் மாணவர்களிடையேயான
ஆங்கிலக் கல்வி மட்டத்தினை அறிந்து, அதனை மதிப்பிட்டு அவர்கள் பின்தங்குவதற்கான
காரணங்களையும் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதே எமது
நோக்கமாகும். இவ் ஆய்வானது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சாதாரண தரத்தை உள்வாங்கிய
ஆறு பாடசாலைகளில் இருந்து எழுமாறாக மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தலா 30
மாணவர்கள் வீதம் மொத்தமாக 90 மாணவர்களை கொண்டமைந்த மாதிரியாகும். இவ் ஆய்வானது
தொகை ரீதியான தரவுகளை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வினாக்கொத்து முறையில் தரவுகள்
திரட்டப்பட்டுள்ளன. இவ் ஆய்வானது முதலாம் தர மற்றும் இரண்டாம் தர தரவுகள் மூலம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வினூடாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற
முஸ்லிம் மாணவர்களிடையே ஆங்கிலக் கல்வி பின்தங்கி உள்ளமையும், அதில் திருப்தியற்ற
நிலையும் காணப்படுகின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாடசாலைக் கல்விச்
செயற்பாடுகள் இன்னும் வினைத்திறன் உள்ளதாக மாற்றி அமைக்கப்படல், பிள்ளைகளுக்கு ஆரம்ப
பாடசாலைகளில் இருந்தே ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவூட்டி அதற்கான
செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் வீட்டுச்சூழலை ஆங்கில மொழி விருத்திக்கேற்ற வகையில்
அமைத்தல் வேண்டும் என்பன இவ்வாய்வின் முடிவாகப் பெறப்பட்டுள்ளன.