Abstract:
உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது
மிகையாகாது. இக்கால கட்டத்தில் விஞ்ஞானத்தின் தாக்கம் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டு
இருப்பது போல் மொழிகளிலும் குறிப்பாக தமிழ் மொழியிலும் ஏற்படுத்தி இருப்பது தவிர்க்க இயலாத
ஒன்றாகும். அந்த வகையில் சர்வதேச மொழியாகக் காணப்படுகின்ற ஆங்கில மொழியின் தாக்கம்
தமிழில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனையே தமிங்கிலம் மற்றும் ஒலிபெயர்ப்பு என்கிறோம்.
மாணவர்களது வாழ்க்கையில் பிரதான அங்கமாக காணப்படுகின்ற திறன்பேசியினது (Smart Phone)
அதிகரித்த பாவனையினால் மாணவர்களிடையே தமிங்கிலம் மற்றும் ஒலிபெயர்ப்பு பாவனை
அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய தமிங்கிலம் மற்றும் ஒலிபெயர்ப்பு பாவனையானது
பல்கலைக்கழக மாணவர்களது தமிழ் புழக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இவ்வாய்வு இலங்கை
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மூன்றாம் வருட
மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இப்பீடத்தில் இருந்து எழுமாறாக தெரிவு
செய்யப்பட்ட 40 மாணர்களைக் கொண்டே இவ்வாய்வு நடாத்தப்பட்டது. இவ்வாய்வானது தொகை
ரீதியான தரவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளதுடன் வினாக்கொத்து முறையில் தரவுகள்
திரட்டப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கு முதலாம்தர மற்றும் இரண்டாம்தர தரவுகள் சேகரிக்கப்பட்டு இவ்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர்களை
மையப்படுத்திய இவ்வாய்வின் ஊடாக மாணவர்களது தமிழ் புழக்கத்தில் தமிங்;கிலப் பாவனையானது
பாதமான விளைவையே ஏற்படுத்தியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிங்கிலப் பாவனையின்
தாக்கத்தினை அரிதாக்குவதற்காக மாணவர்களிடையே தமிழ் தட்டச்சு பாவனையினால் ஏற்படும்
நன்மைகள் குறித்த தெளிவினையும் அத்தகைய தமிழ் தட்டச்சு செயலிகளை எவ்வாறு கையாளலாம்
என்பது தொடர்பான அறிவை வழங்குதல் மற்றும் மொழி இருப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு
உணர்த்துதல் என்பன தீர்வுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.