Abstract:
அகிலத்தாருக்கு சிறந்த வழிகாட்டியாகவும்இ முஸ்லிம்களின் சட்டயாப்பாகவும் விளங்குகின்ற
இறைவனின் திருமறையாம் அல்குர்ஆன் அரபு மொழியில் இறக்கி அருளப்பட்டது. அரபு மொழி
தெரியாதவர்கள் அதன் கருத்தினை விளங்கிக் கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்
கொள்கின்றனர். அரபு மொழியைக் கற்பதன் மூலமாகவோ அல்லது குர்ஆனின் மொழி
பெயர்ப்புக்களின் மூலமாகவோ அவர்களால் அல்குர்ஆனை விளங்க முடியுமாக உள்ளது. அரபு
மொழியைக் கற்பது சிரமமாக இருப்பதுடன்இ மொழிபெயர்ப்புகள் மூலம் முழுமையான பயனை
அடைய முடியாதுள்ளது. இந்நிலையில் எனது இந்த ஆய்வின் மூலம்இ அரபு மொழியின்
அடிப்படைகளை மாத்திரம் கற்று அதன் மூலம் அல்குர்ஆனை விளங்கும் வழிமுறை
முன்வைக்கப்படுகின்றது. இங்கு இதன் வழிமுறை மற்றும் சிறப்பம்சங்கள் விளக்கப்படுவது
மட்டுமன்றி இவ்வழிமுறையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களினதும் கற்கின்ற மாணவர்களினதும்
கருத்துக்களின் சுருக்கமும் தெளிவான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியைத் தாய்
மொழியாகக் கொள்ளாதவர்களுக்கும்இ ஷரீஆவில் சிறப்புத்தேர்ச்சி பெறாதவர்களுக்கும்
இவ்வழிமுறை மூலம் அல்குர்ஆனின் கருத்துகளை தெளிவாக விளங்குவதற்கு இலகு வழிகிட்டுவது
இங்கு நிரூபனமாகின்றது.