Abstract:
அரபு மொழியானது உலகில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழியாகும். பல நாடுகளில் இது
இரண்டாம் மொழியாக காணப்படுவதுடன், இலங்கையில் அரபு மொழி அரச பாடசாலைளிலும்,
பல்கலைக்கழகங்களிலும், மதராஸாக்களிலும் கற்பிக்கப்படும்; ஓரு மொழியாக காணப்படுகிறது.
குறிப்பாக இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் அரபு மொழித்துறைக்கான தனியான பீடம்
உள்ளது. இப்பீடத்திற்கு வருடந்தோறும் சுமார் 200 ற்கு மேற்பட்ட மாணவர்கள் தெரிவு
செய்யப்படுகின்றனர். இவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்களில் அரச பாடசாலைகளில் அரபு
மொழியை பாடமாக கற்ற மாணவர்களும் கனிசமான அளவு உள்வாங்கப்படுகின்றனர். அரச
பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அரபு மொழியை,
இப்பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டாலும் அவர்கள் அரபு மொழியை சரளமாக பேசுவதில் பாரிய
பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே அரபு மொழிப்பேச்சுத்திறனில் அரச
பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அதற்கான தீர்வுகளையும்
கண்டறிவதாகவே இவ்வாய்வு காணப்படுகின்றது.