Abstract:
அறபு மொழி என்பது சர்வதேச ரீதியாக காணப்படுகின்ற பல நூற்றுக் கணக்கான மொழிகளுள் ஓர்
உயர் நிலை பெற்றுக் காணப்படும் சர்வதேச மொழியாகும். இதனைத் தாய் மொழியாகவும் இரண்டாம்
மெயாழியாகவும் கொண்ட முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் வாழ்கின்ற நாடுகள் பல
காணப்படுகின்றன. தற்காலத்தில் இவ்வனைத்து நாடுகளிலும் அறபு மொழியினை விருத்தி செய்வது
தொடர்பான பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னேற்பாடுகள் என்பன
பரந்த நோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இவ்வாய்வு அறபு மொழி
கற்பதில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்ளுதல்
அவற்றிற்கான தீர்வினை வழங்குதல் எனும் பிரதான மற்றும் துணை நோக்கங்களைக் கொண்டுள்ளது.
இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின்
அறபு மொழித்துறை முதலாம் இரண்டாம் வருட மாணவர்களுடனான வினாக் கொத்து
முறைமையினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பெறுபேறுகளின் படி
மாணவர்களின் அறபு மொழியாற்றலானது நடு நிலைத் தரத்தினை கொண்டுள்ள அதேவேளை
அவ்வாற்றலானது மேலும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது
மாணவர்களின் அறபு மொழி கற்றல் தொடர்பில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான
ஆலோசனைகளை வழங்க வல்லது. என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாகும்.