dc.description.abstract |
இன்று மனித வாழ்வின் எல்லா விடயங்களிலும், குடும்ப மற்றும் சமூக வாழ்வு முதல் சமயம்,
அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என அனைத்து
விடயங்களிலும் முரண்பாடு என்பது ஒரு சாதாரன அம்சமாக மாறியுள்ளதைக் காணலாம்.ஒன்றுக்கு
மேற்பட்ட தனிநபர்கள் அல்லது குழுக்கள் அவரவர்களது தேவை, நோக்கம், இலக்கு, நம்பிக்கை,
விழுமியம், விருப்பு போன்றவைகளை புரிந்து கொள்வதன் அடிப்படையில் தோன்றுகின்ற
இணங்காத்தன்மை அல்லது கருத்து வேறுபாடு முரண்பாடு எனப்படுகிறது.முரண்பாட்டைக்
கையாளுதல் என்பது முரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறைகளுடன்
கூடிய செயன்முறைகளாகும். முரண்பாட்டை நுட்பமாகக் கையாள சிறப்புச் தேர்ச்சியுள்ளவர்கள்
தேவை. மதம், இனம், மொழி, இடம், அந்தஸ்து, அரசியல் ,பொருளாதாரம், கலாசாரம்,பன்பாடு,
பழக்க வழக்கங்கள் போன்ற தனிமனித, சமூக வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கான காரணிகளாகக்
கருதலாம். முரண்பாடுகள் பல்வகை தன்மை கொண்டவை என்ற வகையில் முரண்பாடுகளை எப்படி
துள்ளியமாக கையாளுவது, என்பதை முஹம்மத் நபியவர்கள் ஓர் பன்முக ஆளுமை, ஏனைய
ஆளுமைகளைப் போலல்லாது இறை வழிகாட்டலில் முன்மாதிரிகளை உலகிற்கு தந்த மாமனிதர்.
ஏன்ற வகையில் மனித வாழ்வுக்குத் தேவையான அத்தனை விடயங்களுக்கும் அவர்களிடமிருந்து
முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற வகையில், அவர்கள் முரண்பாடுகளை எப்படி
கையான்டார்கள் என்பதை மாத்திரம் கண்டறியும் வகையில் இவ் ஆய்வு
வரையறுக்கப்பட்டுள்ளது.முரண்பாடுகள், அதனைக் கையாளுதல், அதனை முகாமைத்துவம் செய்தல்,
தீர்வு காணுதல் எப்படி என்பது பற்றிய ஆய்வுகள் மற்றும் அவை தொடர்பான பொதுவான கட்டுரைகள்
நிறையவே காணக்கிடைக்கின்றன. தனிமனித ஆளுமைகளின் வாழ்வினை தோடர்பு படுத்தி
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மிகக் குறைவே எனலாம். |
en_US |