dc.description.abstract |
இலங்கை சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும பறங்கியர்கள் வாழக்கூடிய பல்லின
சமூகத்தைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது.வடமத்திய மாகாணத்தில் அமையப்
பெற்றுள்ள அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் பின்னிப் பிணைந்து
வாழ்வதால் இஸ்லாம் மார்க்கததின் பக்கம் ஈர்க்கப்பட்டும் மற்றும் பல கலாசார ரீதியான
காரணங்களினாலும் முஸ்லிமல்லாதோர் பலர்இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அவ்வாறு இஸ்லாத்தைத்
தழுவியவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படல், அவர்களது பெயர் இஸ்லாமியப் பெயர்களாக
மாற்றிக்கொள்வதில் சிரமம், சமூகத்தில் அவர்கள் 'மவ்லா இஸ்லாம்' என அழைக்கப்படல், பொது
இடங்களில் தீண்டாமை மனப்பான்மையுடன் பார்க்கப்படல், அவர்களது பிள்ளைகள் சமூகத்தில்
ஒதுக்கப்படல் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில்
இவ்வாய்வு,இஸ்லாத்தை ஏற்றோர் சமய, சமூக, பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும்
பிரச்சினைகளைக் கண்டறிதல் எனும் பிரதான நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி
மாவட்டத்தில் இஸ்லாத்தை தழுவியுளள் 365 பேருள் 65 பேர் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு
அரைக்கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றின் மூலம்
இவ்வாய்வுக்குரிய தகவல்கள சேகரிக்கப்பட்டு கைமுறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
பெறுபேறுகளின் படி,சமூக ரீதியாக,திருமணத்தில் வேறுபாடு காட்டப்படல், குடும்பத்திலிருந்து ஒதுக்கி
வைக்கப்படல், மொழிப் பாகுபாடு பார்த்தல், இழிவு மனப்பான்மையுடன்
நோக்கப்படல்,தம்பதியினருக்கிடையில் முரண்பாடு மற்றும் விவாகரத்து ஏற்படல்ஆகிய
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, சமய, மற்றும் பொருளாதார ரீதியாக,
இஸ்லாமிய அறிவைப் பெறுவதில் தடை ஏற்படல், அல்குர்ஆனைக் கற்றுக் கொள்வதில் சிரமம்,
பிள்ளைகளை இஸ்லாமிய முறைப்படிவளர்ப்பதில் தடை, இஸ்லாமிய அடிப்படை விடயங்களில்
தெளிவின்மை, முஸ்லிமாகப் பெயர் மாற்றம் செய்துகொள்வதில் சிரமம், முஸ்லிம் அடையாளத்தை
வெளிப்படுததுவதற்கு சங்கடப்படல்,ஸகாத் கிடைக்கப்பெறாமை, போதிய வருமானமின்மை மற்றும்
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள வசதியின்மை ஆகிய பிரச்சினைகளையும்
எதிர்நோக்கி வருகின்றனர். ஆகவே, இவ்வாய்வின் முடிவுகள் சர்வதேச மற்றும் தேசிய அரசு சாரா
இஸ்லாமிய நிறுவனங்ளுக்கு இஸ்லாத்தை ஏற்றோர் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளவும்,
பிரச்சினைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை தீர்க்கப்படவும் ஏதுவாய் அமையும். |
en_US |