Abstract:
இன்று உலகில் பரந்து வாழும் பல்வேறு கிராம மக்கள் பல விதமான பிரச்சினைகளையும்
சவால்களையும் தினமும் எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில்
முக்கியமாக இனங்காணப்படக்கூடிய ஒரு பிரச்சினையாக வனவிலங்குப் பிரச்சினை காணப்படுகிறது.
இவ்வனவிலங்குப் பிரச்சினையால் கிராம மக்கள் உயிர் சேதம், உடமை சேதம், விவசாய நில
இழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வண்ணமாகவே உள்ளனர்.
இவர்களுக்கான தீர்வுகள் உரிய கால அடிப்படையில் அரசினால் மேற்கொள்ளப்படுவதில்லை
என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாய்வு அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பகுதிக்குட்பட்ட ஆலங்குலம் மற்றும்
சம்புநகர் ஆகிய கிராமங்களை உட்படுத்திய ஆய்வாகும். ஆவ்வூர் மக்கள் எவ்வகையான
வனவிலங்குகள் மூலம் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். மற்றும் அதன் மூலம் அவ்வூர் மக்கள்
முகம் கொடுக்கும் இழப்புக்களும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான சில
பிரச்சினைகளையும் இவ்வாய்வு வெளிக்கொணர எத்தனிக்கின்றது. இவ்வாய்வுக்காக முதல் நிலை
மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.