Abstract:
உலக நாடுகளில் இஸ்லாம் குறித்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டாகவும் ஒருநாட்டின்
வளர்ச்சியை ஏற்படுத்தும் கூறாகவும் பெண்ணிலை வாதிகளின் ஒரு கூற்றாகவும் பெண்களுக்கான
பொருளாதார உரிமைகள் காணப்படுகின்றன. இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை
பிரதேசத்திற்கு உட்பட்டதாக மலையடிக்கிராமம் 01 எனும் கிராமநிலதாரி பிரிவு காணப்படுகின்றது.
மலையடிக்கிராமம் 01 இல் முழுவதுமாக முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இங்கு இஸ்லாம்
பெண்களுக்கு வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளை அனுபவிப்பதில் பெண்கள் பிரச்சினைகளை
எதிர்நோக்குகின்றனர். இதனால் இப்பிரதேசத்தில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வின்
பிரதான நோக்கமாக மலையடிக்கிராமம் 01 இல் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள்
அமுல்படுத்தப்பட்டிருக்கும் விதம் பற்றி இனங்காணல், பெண்களுக்கான பொருளாதார உரிமைகளுக்கு
தடையாக உள்ள அம்சங்களை கண்டறிதல், அவற்றை களைவதற்கான தீர்வுகளை முன்வைத்தல்,
வழிகளை இணங்கானல், மற்றும் இஸ்லாமிய உரிமைகளை பெறும் வழிகளை உருவாக்கல்
போன்றன காணப்படுகின்றன. இவ் ஆய்வினை மேற்கொள்தற்காக முதலாம் நிலைத்தரவுகள் மற்றும்
இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலைத்தரவுகளாக
நேர்கானல், வினாக்கொத்து, கலந்துரையாடல் போன்றவையும் இரண்டாம் நிலைத்தரவுகளாக பிரதேச
சபைத்தரவுகள், இணையத்தளம், கட்டுரைகள், நுல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டன. இப் பண்பு சார்
மற்றும் அளவுசார் தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்காக Microsoft office 2013(word,Excel) போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தபடுத்தப்பட்டன. பெண்களுக்கான விழிப்புனர்வை
ஏற்படுத்துவதற்கு பல சங்க அமைப்புக்கள் காணப்படுவதுடன் இவற்றுக்கு தடையாக உட்கட்டமைப்பு
வசதிகள் சீரின்மை, சிறந்த முகாமையின்மை, வழிகாட்டல்களின்மை, மக்கள் ஒத்துழைப்பின்மை
போன்ற செயற்பாடுகள் காணப்படுகின்றன. இத்தடைகளை நீக்கி பெண்களை ஊக்குவிக்க அரச
மற்றும் தனியார் வங்கிகளும் கடன் வசதிகளை இஸ்லாமிய அடிப்படையில் வழங்குதல் வேண்டும்.
ஒழுங்கமைந்த கருத்தரங்குகளை செய்தல் பொது மக்களின் ஒத்துழைப்புகளை பெறல் போன்றவற்றை
விதந்துரைகளாக குறிப்பிடலாம். இப்பிரதேசத்தில்; இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள
பொருளாதார உரிமைகளைமேம்படுத்துவதற்கும் பொருளாதார மற்றும் சமுக ரீதியில் முக்கியம்
பெறுவதற்கும் இவ்வாய்வு முக்கியம் பெறும் களமாக அமைந்துள்ளது.