Abstract:
சமூகக் கட்டமைப்பு சிதைந்து விடாமல் பாதுகாப்பதற்கான அரணாக குடும்ப வாழ்வை இஸ்லாம்
வலியுறுத்துகின்றது. குடும்ப வாழ்வின் நோக்கம், தேவைகள் மகிழ்ச்சிகரமான விவாக வாழ்க்கைக்கான
அடிப்படைகளை இஸ்லாம் விரிவாக முன்வைத்துள்ளது. ஆயினும் ஓர் ஆணும் பெண்ணும் குடும்ப
வாழ்வில் தொடர்ந்;தும் இணைந்து வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் போது இஸ்லாம் தவிர்க்க
முடியாத நிலையில் விவாக விடுதலையை அனுமதிக்கின்றது. அதனை ஊக்குவிக்கவில்லை.
இப்பிண்ணனியில் ஆலங்குலம் மற்றும் சம்புநகர் போன்றன மிகவும் பின்தங்கிய நிலையில்
காணப்படும் கிராமங்களாகும். அங்கு வாழும் மக்கள் குடும்ப வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்நோக்கியவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் தமது வாழ்வில் பல பிரச்சினைகளை
எதிர்நோக்குவதால் பல விவாகரத்துக்கள் இடம்பெறுகின்றன.இது பல குடும்பச் சீரழிவுகள்
இடம்பெறுவதற்கு வழிவகுக்கின்றன. அதனடிப்படையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் இக்கிராம
வாழ் மக்களின் வாழ்வை சீர்செய்வதற்கான முன்மொழிவுகளும் இளவயது விவாகரத்து
இடம்பெறுகின்ற அளவைக் குறைப்பதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இவ்வாய்வின்
பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. பண்பளவிலான மற்றும் எண்ணிக்கையளவிலான
இவ்வாய்வின் முடிவுகளும் வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் அவதானம் போன்றவற்றை
மையமாகக் கொண்டு பெறப்பட்ட முதலாம் நிலைத்தரவுகளும் நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள்
போன்றவற்றினூடாக இரண்டாம் நிலைத்தரவுகளும் பெறப்பட்டு, அவற்றைப் பகுப்பாய்வு
செய்வதற்காக Microsoft Excel மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.