dc.description.abstract |
பிள்ளைகள் சமூகமயப்படுத்தல் செயற்பாட்டின் முதலாம் நிலையானது குடும்பத்தில்
மேற்கொள்ளப்படும். அதேவேளை, இரண்டாம் நிலை சமூகமயமக்கல் நிறுவனங்களாக சமயம்,
பாடசாலை, சகபாடிகள் போன்றோர்கள் காணப்படுகின்றனர். இஸ்லாமியர்கள் மத்தியில்
மாணவர்களை சமூகமயப்படுத்தப்படும் செயற்பாட்டில் முக்கியமான வகிப்பாங்கினை உடைய கல்வி
நிறுவனமாக மத்ரசாக்கள் காணப்படுகின்றன. இலங்கையின் உள்நாட்டு யுத்த சூழலில்
யாழ்ப்பாணமாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறியுள்ள இஸ்லாமிய சமூகத்தின்
சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களாக மத்ரசாக்கள் அமைகின்றன. யாழ்ப்பாண
மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற இப்பகுதியில் 13
பள்ளிவாசல்கள் காணப்படும் அதேவேளை, அதில் 03 பள்ளிவாசல்களை மையமாக கொண்டு
பகுதிநேர மத்ரசா வகுப்புக்கள் இடம்பெறுகின்றது. இதில் இருந்து எழுமாறாக யாழ்பாண பெரிய
பள்ளிவாசலை தெரிவு செய்து அதில் குவிமையக்குழு கலந்துரையாடல், ஆழமான நேர்காணல்,
விடய ஆய்வு ,பங்குபற்றும் அவதானம் ஆகிய பண்புசார் ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள்
திரட்டப்பட்டன. இதற்கு மேலதிகமாக மத்ரசா கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற ஹபிஸ்
,மௌலவிகள் உள்ளடங்களாக 10 பேரிடம் ஆழமான நேர்காணல்;கள் மூலமாகவும் மேலதிகமாக
தரவுகள் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்ரசா கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய
சமூகத்தின் பண்பாட்டு பெறுமானங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள், நெறிமுறைகள்
போன்ற விடயங்களை இளம் தலைமுறையினருக்கு கையளிக்கும் நிறுவனமாக காணப்படுகின்றது.
மேலும் ,நவீன உலக சுழலில் சமூகத்தை வழிப்படுத்தி ஒழுக்கத்துடன் கூடிய சமூகத்தை
உருவாக்;கும் பணியினை மேற்கொள்கின்றது. இஸ்லாமிய சமூகத்தை பொறுத்தவரை மத்ரசா கல்வி
நிறுவனமானது புனித அல்குர்ஆன் மற்றும் அரபு மொழியினை அடிப்படையாகக் கொண்டு இளம்
தலைமுறையினருக்கு வழிகாட்டுவதாக அமைவதுடன் இதன் ஊடாக இஸ்லாம் சமூகத்தின் அரசியல்,
பொருளாதாரம், குடும்பம், பண்பாடு, ஏனைய சமூக நிறுவனங்களில் தனது செல்வாக்கினை
செலுத்துவதாக உள்ளது போருக்கு பிந்திய மீள்குடியேறிய யாழ்ப்பாண இஸ்லாமிய சமூகத்தின் சமூக
இயங்குத்தன்மையை தீர்மானிப்பதாகவும் சமூக அசைவியக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக
மத்ரசாக்கள் மாணவர்களை நேர்மயமான விதத்தில் சமூகமயப்படுத்தல் செயற்பாட்டில் முக்கியமான
தனது வகிபங்கினை வழங்குகின்றது. சமய கருத்;துகளின் ஊடாக சமூக ஓழுங்கினை பேணும்
நிறுவனமாக மத்ரசாக்கள் அமைவதுடன் ஏனைய சமூகங்களுக்கும், சமயங்களுக்கும் முன்மாதிரியான
கல்வி திட்டத்தை கொண்டதாக இஸ்லாம் மதத்தின் மத்ரசா கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன. |
en_US |