Abstract:
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலங்குளக் கிராமத்தின்
சமூக, பொருளாதாரம் பின்னடைந்து காணப்படுகின்றன. எனவே இவற்றுக்கான காரணங்களை
கண்டறிய ஆய்வு அவசியமாகின்றது. அந்த வகையில் சமூகப் பொருளாதாரப் பின்னடைவுக்கான
காரணங்களை கண்டறிதலை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்புரீதியான ஆய்வு
முறையிலான இக்கட்டுரை ஆய்வுப் பிரதேசத்தில் எழுமாறாக 25 நபர்களிடம் பேட்டிகாணல் முறையில்
தரவுகள் சேகரிக்கப்பட்டதோடு, எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 30 பேரிடம் வினாக்கொத்து
முறையிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இக்கிராமத்தின் சமூகப்
பொருளாதாரப் பின்னடைவுக்கு பல காரணிகள் வழிகோலியுள்ளன. அவற்றில் சமூக ரீதியான பிரதான
காரணியாக குறைந்த கல்வியறிவு, கல்வியறிவின்மையே காணப்படுகின்றன. அத்தோடு இளவயதுத்
திருமணம், இளைஞர் வழிகாட்டலின்மை , போதைப்பொருள் பாவனை போன்ற காரணிகளும் சமூகப்
பின்னடைவுக்கான முக்கிய காரணிகளாகும். பொருளாதாரப் பின்னடைவுக்குரிய பிரதான காரணியாக
அமைவது நிரந்தர தொழிலின்மையே ஆகும். மேலும் சொந்தக்காணியின்மை, தொடர்ச்சியான
வறுமை, நீர்வசதியின்மை, மேய்ச்சல் நிலமின்மை போன்ற காரணிகளும் செல்வாக்குச்
செலுத்துகின்றன. என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். இவ் ஆய்வை ஆலங்குளக்
கிராமத்தின் சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முன்னெடுப்பாகக் கொள்ளலாம்.