Abstract:
இன்றைய காலகட்டத்தின் பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக இஸ்லாம் பற்றிய எழுத்துக்களின்
அருந்தற்தன்மை காணப்படுகின்றது. இதனால் இஸ்லாம் பற்றிய புரிதல்கள் வாய்மொழிக்
கதைகளாளவே உள்ளன. இவற்றினுடைய இடைவெளிகள் வரலாற்று ஆதாரவியலில் இஸ்லாம்
பற்றிய எடுத்துரைப்பியலை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவ்வகையே இஸ்லாமிய கட்டடங்களும்
கலைவரலாற்றில் முக்கியம் பெறுகின்றன. கட்டடக்கலையின் அழகியலை அதன் சமூகப் பண்பாட்டுத்
தேவைகளும் அதன் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் நிர்ணயிக்கின்றன. இஸ்லாமியக்
கட்டடக்கலையும் அதற்;கு விதிவிலக்கானதல்ல. அதன் சமய மற்றும் அதன் பண்பாட்டுப் பிராந்தியத்
தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவை உருவாகின்றன. இஸ்லாமிய மரபுரிமை பற்றிய
தேடலில் கட்டடவியலின் தனித்துவமும் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வகை கலையம்சமும்,
காலநீட்சியும் பொருந்தியவை பள்ளிவாசல்கள். அவற்றின் மீது கவனம் செலுத்தப்படாமைக்கான
காரணம் தான் என்ன? வரலாறுகள் இவற்றை மறந்து பயணிக்கின்றனவா? கவனயீனமா? எழுத்துக்கள்
இன்மையா? இவற்றோடு தொடர்புடையதாக இஸ்லாமிய அடிப்படைகளை மையமாகக் கொண்டு
காலியின் பழமையான பள்ளிவாசலினை மையப்படுத்தி இன்றைய காலகட்டப் பிரச்சினையில்
இஸ்லாமிய கலை வரலாற்றை வாசித்தலாக இவ் ஆய்வு அமைகியது.