dc.description.abstract |
இலங்கை முஸ்லிம் சமகால கல்வி நிலையினையும் எதிர் கொள்ளப்படும் சவால்களை மையமாக
கொண்டதாக ஆய்வுக் கட்டுரை உள்ளது. இது யாழ் மாவட்டத்தினை விசேடமாக குவிமையப்படுத்துகின்றது.1990
ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் இரண்டு தசாப்பதத்தின் பின்னர்
மீள்குடியேறியுள்ள இச்சூழலில் சமூக பொருளாதார மற்றும் உள ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்
கொள்ளுகின்றனர்.குறிப்பாக கல்வி நிலையில் இவை பாரியளவு தாக்கம் செலுத்துகின்றன.யாழ் மாவட்டத்தில்
இரண்டு முஸ்லிம் பாடசாலைகளான உஸ்மானிய்யா கல்லூரிஇ கதீஜா பெண்கள் கல்லூரி போன்றவற்றில் கல்வி
பயில்கின்றனர்.யாழ் மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள முஸ்லிம்களின் வதிவிடங்ளும் பாடசாலைகளும் நகரின்
ஏனைய பகுதிகள் போல வளர்ச்சியடையாமை கவனிக்கத்தக்கது.ஆய்வானது வினாக்கொத்து மற்றும் நேர்காணல்
போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்துடன் இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகரிக்கப்பட்டு
பெறப்பட்ட தரவுகளானது கணனி மூலம் குறிப்பாக Excel Package மூலமும், எளியபுள்ளிவிபரவியல் முறை
மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வின் முடிவுகளின்படி குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குறைந்த
வருமானத்தினையுடைய தொழில்களில்; ஈடுபடுகின்றமை,வதிவிட சார்ந்த பிரச்சினைகள்(வீடின்மை,நிரந்த வீடின்மை,
அடிப்படை வசதிகளீன்மை), சமூக பங்கேற்பின்மை, வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பின்மை போன்ற பல சமூக
பொருளாதார பிரச்சினைகள் இனம்காணப்பட்டதுடன் கல்வியில் பாடசாலை கற்பித்தலில் துணை சாதனங்கள்
வளங்கள் போதுமானதாக இல்லாமை,பெற்றோருக்கும் பாடசாலைக்கும் இடையிலான இடைத்தொடர்பு குறைவாக
காணப்படுகின்றமை,கற்பதற்கான வீட்டுச் சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் இன்மை,கல்வித் தேவைகளினை
நிறைவேற்றப்படாமை மற்றும் ஏனைய பல பிரச்சினைகள் வகிபங்கினை ஆற்றுகின்றமை ஆய்வின் மூலம்
கண்டறியப்படுள்ளது.
பெற்றோரினை ஊக்கப்படுத்தல் பாடசாலையுடனான இடைவினையை அதிகரித்தல்இவீட்டுத்திட்டத்தினை
விரைவாக முன்னெடுத்தல்இகல்விற்கான புலமைபரிசில், நிதி மற்றும் கடன் உதவித்திட்டங்களி
முன்னெடுத்தல்இபாடசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்தல்இகற்றலுக்கு பொருத்தமான வீட்டுச்
சூழல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுதல், அரச மற்றும் அரசசார்பற்ற மூலம் உதவித்திட்டங்களை
முன்னெடுத்தல், பெண்கள் சார்ந்த தொழில்களை ஏற்படுத்துதல்,போன்றன எடுத்தியம்பும் தீர்வுகளாகவுள்ளன. |
en_US |