dc.description.abstract |
இஸ்லாமானது ஆடைக்கலாச்சாரத்தில் உடலியல் நிலைமைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான
ஆடைமுறைகளை வழங்கிய ஒரு பூரணத்துவமான மார்க்கமாகும். பெண்களின் ஆடை விடயத்தில்
கூடிய கவனம் செலுத்தியுள்ளது இதனை வலியுறுத்தியே பின்வரும் ஹதீஸ் அமைகின்றது, அதாவது
"ஓ அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டாளேயானால் அவள் மணிக்கரத்தையும், முகத்தையும்
தவிர தம் உடலின் எந்தவொரு பாகத்தையும், அந்நிய ஆடவர் முன்திறந்து காட்ட அனுமதி இல்லை"
ஆதாரம் அபுதாவூத். அந்த வகையில் இளம் முஸ்லிம் பெண்களிடத்தில் ஆடைக்கலாச்சார
சீரழிவினையும், அதிலிருந்து மீளுவதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைப்பது இவ்வாய்வின் பிரதான
நோக்கமாகும். பண்புரீதியான இவ்வாய்வானது ஆய்வுக்குறிக்கோளினை அடைய இஸ்லாத்தின்
மூலாதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ் தற்கால முஸ்லிம் சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்,
நூல்கள், சஞ்சிகைகள், மற்றும் வினாக்கொத்தின்; மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு
பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட முடிவுகள், மார்க்கஅறிஞர்கள் சமூக நலன் விரும்பிகள்
போன்றோருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் என்பவற்றை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் இஸ்லாமிய ஆடை அணிகின்ற நோக்கம் புறக்கணிக்கப்படல், ஆடம்பரமான
ஆடைக்கலாச்சாரம், இறுக்கமான ஆடைமுறைகள், மெல்லிய ஆடைவகைகள், கவர்ச்சிகரமான
ஆடைவகைகள், என்பன இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தினை பாதித்து இளம் முஸ்லிம் பெண்களை
பாரியளவில் சீரழித்துக் காணப்படுகின்றன, என்பது இவ்வாய்வின் முடிவுகளாக பெறப்பட்டுள்ளன.
அதேவேளை இவர்களை மீட்டெடுப்பதற்கு சிறியவயதிலே இஸ்லாமிய சூழலில் பெண்பிள்ளைகளை
வளர்த்தல், பாதுகாவலர்களான பெற்றோர்கள், சகோதரர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின்
ஆடைக்கலாச்சாரத்தில் கண்ணும் கருத்துமாக இருத்தல், இஸ்லாமிய ஆடையின் அவசியத்தை
பற்றிய விழிப்புணர்வை இளம் பெண்கள் மத்தியிலும், விற்பனையாளர்களிடமும் ஏற்படுத்தல்,
இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தை மீறுவதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இஸ்லாமிய
ஆடைக்கலாச்சாரம் சம்பந்தமான அறிவுரை நிகழ்வினை அடிக்கடி நிகழ்த்துதல் போன்றன
பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |